கொரியாகாரன் மார்க்கெட்டை புடிக்க ஸ்கெட்ச் போட்டுட்டான்! மாருதி, டாடாவை கதற விட போகும் புது கார் நாளைக்கு வருது
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளை கியா நிறுவனம் மிக நீண்ட காலமாகவே மேற்கொண்டு வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதாவது புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார், அறிமுகத்திற்கு தயாராகி விட்டது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார், நாளை (டிசம்பர் 10) பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. கியா நிறுவனம் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விட்டதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.

புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரில், சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைககள் மற்றும் ட்யூயல் டோன் அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற வசதிகள் (Features) எல்லாம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும் நம்மால் எதிர்பார்க்க முடியும். அத்துடன் புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் டிசைனிலும் (Design) பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் டிசைனை பொறுத்தவரையில், முன் மற்றும் பின் பகுதியில் புதிய பம்பர்கள், புதிய க்ரில் அமைப்பு, ஸ்பிளிட் எல்இடி பகல் நேர விளக்குகள், முழு எல்இடி லைட்டிங், டெயில்கேட்டின் மீது புதிய எல்இடி லைட் பார் மற்றும் புதிய அலாய் வீல்கள் போன்ற அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.
ஆனால் இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பது சந்தேகம்தான். அதாவது தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள்தான் (Engine Options), புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் கியா செல்டோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.79 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.81 லட்ச ரூபாயாக உள்ளது. இவை கியா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஆனால் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுவதால் புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் விலை சற்று உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 11.25 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), டாடா கர்வ் (Tata Curvv) மற்றும் டாடா சியரா (Tata Sierra) போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் வருகை மூலமாக, விற்பனையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அத்துடன் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்ற, மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்கும், புதிய தலைமுறை கியா செல்டோஸ் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் இந்திய சந்தையில் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார் செல்டோஸ்தான். அதில் தற்போது மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதால், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய தலைமுறை கியா செல்டோஸ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








