பல வருடங்களுக்கு பின் களமிறங்கும் பிரபலமான கார்! மொத்த கூட்டத்தையும் எதுக்க தனி ஆளா வருது! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கார், கடந்த 2022ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. 10 ஆண்டு காலம் மட்டுமே விற்பனையில் இருந்தாலும், இந்தியாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை ரெனால்ட் டஸ்டர் உருவாக்கி கொண்டது.

இந்த சூழலில், ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடலை, இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக மிக நீண்ட காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது அந்த தகவல் ரெனால்ட் நிறுவனம் தரப்பிலேயே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

2025 Renault Duster

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர், வரும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று (Republic Day), இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் குறித்த முக்கியமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில், 156 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.3 லிட்டர் HR13 டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை நாம் எதிர்பார்க்கலாம். அனேகமாக புதிய ரெனால்ட் டஸ்டர் காரின் டாப் வேரியண்ட்களில் இந்த இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2025 Renault Duster Interior Design

அதே நேரத்தில் ஆரம்ப நிலை வேரியண்ட்களில், தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் கைகர் காரில் வழங்கப்பட்டு வரும் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என்றாலும் கூட, எதிர்காலத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களை நாம் எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் வசதிகளை (Features) பொறுத்தவரையில், 10 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா மற்றும் ஆர்கமஸ் 3டி சவுண்ட் சிஸ்டம் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கலாம்.

அத்துடன் அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பையும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது நடக்கும்பட்சத்தில், இந்திய சந்தையில் அடாஸ் தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கும் ரெனால்ட் நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை டஸ்டர் பெறும்.

முன்பு ரெனால்ட் டஸ்டர் விற்பனையில் இருந்தபோது, அதன் அடிப்படையில் நிஸான் டெரானோ (Nissan Terrano) என்ற காரை, நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. அதே பாணியில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், அதன் அடிப்படையில் நிஸான் டெக்டான் (Nissan Tekton) என்ற காரை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில மாதங்களில், நிஸான் டெக்டான் விற்பனைக்கு வரும். புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் வருகை, மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

அத்துடன் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஹோண்டா எலவேட் (Honda Elevate), எம்ஜி அஸ்டர் (MG Astor), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), டாடா கர்வ் (Tata Curvv) மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா சியரா (Tata Sierra) ஆகிய கார்களுக்கும், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் வருகையால் நெருக்கடி ஏற்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை அனேகமாக வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 8, 2025, 12:23 [IST]
English summary
New gen renault duster launch nears expected price features engine options and more
மேலும்... #renault #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+