அடையாளமே தெரியாமல் மாறப்போகும் ஐ20 கார்! மைலேஜ் தாறுமாறா கிடைக்கும்!
ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 காரை விரைவில் அப்டேட் செய்து வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அப்டேட்டில் தள்போதுஉள்ள மாடலை அடையாளமே தெரியாத அளவில் மாற்றி, புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இந்த கார் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் காரை நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் வெற்றிகரமாக விற்பனைசெய்து வருகிறது. தற்போது விற்பனையாகும் தலைமுறை கடந்த 2020ம் ஆண்டுஅப்டேட் செய்யப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வெளியிடப்பட்டது. அந்நிறுவனத்தின் திட்டத்தின்படி வரும் 2026ம் ஆண்டு இதன் அடுத்த தலைமுறை வெளியாக வேண்டும்.

தற்போக இந்நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. வரும் 2030ம் ஆண்டிற்குள் மொத்தம் 26 புதிய கார்களை களம் இறக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் இந்த புதிய தலைமுறை ஐ20 காரும் அடக்கம். இந்த கார் வரும் 2026ம் ஆண்டே அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்டேட்டில் ஹூண்டாய் நிறுவனம் முக்கியமாக பல மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இதன் வெளிப்புற வடிவமைப்பு, கேபின் டிசைன் மற்றும் அம்சங்களில் மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இதன் வெளிப்புற டிசைன் மார்கெட்டில் உள்ள போட்டிகார்களை தாண்டி எதிர்கால இளைஞர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

முக்கியமாக இதன் ஹெட்லைட் வடிவமைப்பில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. இது போக முன்பக்கம் டிஆர்எல் வடிவமப்பில் வித்தியாசமான டிசைன் இடம் பெறவும் வாய்ப்புள்ளது.மேலும் நவீன கார்களில் வருவது போல இரண்டு ஹெட்லைட்களையும் இணைக்கும்வகையில் எல்இடி ஸ்டிரிப்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
இது போக முன்பக்க கிரில், மற்றும் பம்பர் வடிவமைப்பிலும் மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் பக்கவாட்டில் வீல் பகுதியில் கருப்பு கிளாடிங் வழங்கப்படலாம். மேலும் பின்பக்கம் கிராஸ்ஓவர் போன்ற லுக்கில் வடிவமைக்கப்படலாம். இதனால் பூட் பகுதி அதிகமாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பின்பக்கம் எல்இடி டெயில் லீட்டுகள் பொருத்தப்பட்டு பின்பக்கமும் லைட் பார் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த லைட்கள் எல்லாம் ஸ்லீக்கான ஸ்டைலான லுக்கில் இடம் பெற வாய்ப்புள்ளது. இந்த காரின் உட்புறம் மார்டன், பிராக்டிக்கல் ஆகிய அம்சங்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக இதில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இது போக கூடுதலாக சில அம்சங்களும் இடம் பெற வாய்ப்புள்ளது.
இந்த காரில் உள்ள இன்ஜின் ஆப்ஷனை பொருத்தவரை தற்பேஆது உள்ள அதே இன்ஜின் ஆப்ஷனே தொடர வாய்ப்புள்ளது. முக்கியமாக 1.0 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல், மறஅறும் 1.2 லி நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இடம் பெறும். இதுபோக மைல்டுஹைபிட் சிஸ்டமும் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் ஹைபிரிட் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இருப்பதை வெளியிட்டுள்ளதால் இந்த காரில் அதை முதலில் கொண்டுவர கூட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐ20 கார் இன்று பலருக்கு விருப்பமான காராக இருக்கிறது.இந்த கார் மார்கெட்டில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் நிலையில் இதில் புதிய தலைமுறை அப்டேட் வந்தால் ஹேட்ச்பேக் செக்மெண்டே புத்துணர்ச்சிபெறும் அதிலும் ஹைபிரிட் கார் வந்து மைலேஜ் அதிகமானால் நிச்சயம் மிகப்பெரிய வரவேற்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









