5 ஸ்டார் ரேட்டிங் கிடைச்சிடுச்சு! விலை கம்மியான கார்ல இவ்வளவு பாதுகாப்பு அம்சங்களா?
ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரின் 3ம் தலை முறை வெர்ஷன் கார் பாரத் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணாலம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் காரின் 3ம் தலைமுறை வெர்ஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் பாதுகாப்பு ரேட்டிங்கிற்காக பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த கார் இந்த சோதனையில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது.

இதனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான கார்களின் பட்டியலில் இந்த காரும் இணைந்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான குளோபல் என்கேப் மற்றும் யூரோ என்கேப்பிற்கு இணையாக பாரத் என்கேப் முற்றிலும் இந்தியாவிலேயே செய்யப்படும் சோதனை முறையாகும். இதில் முன்பக்க மோதல், பக்காவாட்டு மோதல் குழந்தைகள் சீட் பொருத்துதல் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்படும்.
அமேஸ் 3ம் தலைமுறை காரை பொருத்தவரை அந்த காரின் வி சிவிடி, விஎக்ஸ் சிவிடி, இசட்எக்ஸ் எம்டி ஆகிய வேரியன்ட்களில் சோதனை செய்யப்பட்டது. இந்த கார் செடான் பாடி டைப் கொண்ட இரண்டு வரிசை சீட்டர் கார் ஆகும். இந்த காரின் மொத்த எடை 1241 கிலோ ஆகும்.

இந்த கார் முன்பக்க மோதலில் மொத்தம் 16க்கு 14.33 மதிப்பெண்களை பெற்றது. பக்கவாட்டு மோதல் சோதனையில் 16க்கு 14.00 புள்ளிகளை பெற்றது. இதனால் மொத்தம் பெரியவர்களுக்கான சோதனையில் 24க்கு 23.81 புள்ளிகளை பெற்றுள்ளது. இது சிறப்பான புள்ளிகள் ஆகும். இந்த புள்ளிகளை பெற இந்தகாரில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் உதவியாக இருந்தது. குறிப்பாக முன்பக்கம் உள்ள 2 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஐஎஸ்ஓஃபிக்ஸ் மவுண்ட், குழந்தைகளுக்கான சீட் உள்ளிட்ட விஷயங்கள் உதவியாக இருந்தது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை பொருத்தவரை சிஆர்எஸ் எனப்படும் சைல்டு ரெஸ்டரெயின்ட் சிஸ்டத்திற்கு 12க்கு 12 புள்ளிகளை பெற்றுள்ளது. இதுபோக டைனமிக் ஸ்கோரில் 8க்கு 7.81 புள்ளிகளை பெற்றுள்ளது. 3 வயது குழந்தை அளவுள்ள ஒரு டம்மியை பயன்படுத்தியதில் இந்த அளவு எட்டியுள்ளது. இதுவே 18 மாதம் கொண்ட ஒரு குழந்தை டம்மியை பயன்படுத்தும் போது 8க்கு8 புள்ளிகள் கிடைத்துள்ளது.

அமேஸ் காரில் ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சீட்களில் பின்பக்கம் பார்த்து அமரும் வகை சீட்டில் கால்களுக்கான சப்போர்ட், வழங்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் கைப்பிள்ளைகளுக்கு பாதுகாப்பை வழங்கும். இந்த காரில் இஎஸ்சி சீட் பெல்ட் ரிமைண்டர், இபிடியுடன் கூடிய ஏபிஎ், ஏர்பேக் கட் ஆஃப் சுவிட்ச், பின்பக்க டீஃபாகர்கள், குழந்தைகளுக்கான சேப்டி லாக்குகள் உள்ளன.
இந்தியாவில் பாதுகாப்பு நிறைந்த கார்கள் அதிகமாக விற்பனையாகும். டாடா நிறுவனங்கள் கார்கள் மக்கள் மத்தியில் பெயர் பெற்றதற்கு காரணம் இதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கிராஷ் டெஸ்ட் சோதனையில் பெறப்பட்ட ஸ்டார் ரேட்டிங்கள் தான். இதனால் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ள நிலையில் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிறைந்த காருக்கு என்றும் ஒரு சிறப்பு வரவேற்பு இருக்கும். இந்நிலையில் அமேஸ் கார் பாதுகாப்பு ரேட்டிங்கில் 5 ஸ்டார்களும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் சிறப்பான புள்ளிகளையும் பெற்றதுள்ளது.இதனால் இந்தகாரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









