இந்த 2 கார்களில் எதை வாங்குவது என்கிற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும்! ஹோண்டா பிளான் போட்டுதான் விற்குது

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனம் அதன் புதிய அமேஸ் காரை கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அமேஸ் காரின் 3ஆம் தலைமுறை மாடலாக புதிய அமேஸ் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும், பழைய 2ஆம் தலைமுறை அமேஸ் காரும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய அமேஸ் காருக்கும், பழைய அமேஸ் காருக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

விலை: புதிய 3ஆம் தலைமுறை அமேஸ் கார் ஆனது வி, வி.எக்ஸ் மற்றும் இசட்.எக்ஸ் என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. அதுவே, பழைய அமேஸ் கார் ஆனது எஸ் மற்றும் வி.எக்ஸ் என 2 விதமான வேரியண்ட்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரு அமேஸ் கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விலையில் உள்ள வி.எக்ஸ் வேரியண்ட்களை தான் இந்த தொகுப்பில் ஒப்பிட்டு பார்க்க போகிறோம்.

new amaze vs old amaze

புதிய அமேஸ் காரின் வி.எக்ஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ரூ.8.19 லட்சமாகவும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் ரூ.10.19 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பழைய அமேஸ் வி.எக்ஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.9.04 லட்சம் மற்றும் ரூ.9.86 லட்சமாக உள்ளன.

தொழிற்நுட்ப வசதிகள்: 2024இல் அறிமுகம் செய்யப்பட்ட 3ஆம் தலைமுறை ஹோண்டா அமேஸ் வி.எக்ஸ் காரில் 15-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டாலும், சக்கரங்களுக்கு ட்யூயல்-டோன் பெயிண்ட் கிடையாது. எல்இடி புரோஜெக்டர் ஃபாக் விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், காருக்கு உள்ளே வயர்லெஸ் போன் சார்ஜர், பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி வெண்ட்ஸ், காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய புஷ் பொத்தான் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

new amaze vs old amaze

பழைய 2ஆம் தலைமுறை அமேஸ் வி.எக்ஸ் காரில் எல்இடி புரோஜெக்டர் & ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள் உடன் ஃபாக் விளக்குகள், எலக்ட்ரிக் மூலமாக மடக்கக்கூடிய ORVM-கள், டைமண்ட்-கட் ரிம்கள் உடன் 15-இன்ச் அலாய் சக்கரங்கள், காருக்கு உள்ளே 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

அத்துடன், ரியர் டீஃபாகர், காரை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய புஷ் பொத்தான் மற்றும் ரியர்-வியூ கேமரா உள்ளிட்ட வசதிகளையும் பெறும் பழைய 2ஆம் தலைமுறை அமேஸ் காரில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 6 ஏர்பேக்குகள் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உடன் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட மாடர்ன் வசதிகள் கிடைப்பதில்லை.

new amaze vs old amaze

என்ஜின்: புதிய அமேஸ் மற்றும் பழைய அமேஸ் என இரண்டு கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினை ஹோண்டா வழங்குகிறது. ஆனால், புதிய அமேஸ் காரில் இந்த என்ஜின் மேம்பட்ட செயல்படுதிறனை வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, குறிப்பாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் புதிய அமேஸ் காரை வாங்குபவர்கள் அதிக மைலேஜை பெற முடியுமாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய தலைமுறை கார் என்றாலே சில வசதிகள் இடம்பெறாதது வழக்கமான ஒன்றே. இருப்பினும், மாடர்ன் வசதிகளை பெரியதாக எதிர்பார்க்காமல், குறைந்த விலையில் அமேஸ் காரை வாங்க நினைப்பவர்களுக்கு 2ஆம் தலைமுறை மாடல் ஏற்றதாக இருக்கும். அதேநேரம், அப்டேட்டான காரை வாங்க நினைப்பவர்களுக்கு 3ஆம் தலைமுறை அமேஸ் ஏற்றதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2025, 22:37 [IST]
English summary
New honda amaze vs old amaze car comparison
மேலும்... #honda cars #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X