7 பேர் வரை சவுகரியமா அமர்ந்து செல்லலாம்... மொத்தமா மூடியப்படி சென்ற புதிய கியா கார்!
கியா (Kia) நிறுவனம் மூன்று இருக்கை வரிசை கொண்ட புதிய ஹைப்ரீட் எஸ்யூவி (Hybrid SUV) காரை இந்திய சாலைகளில் மீண்டும் சோதனை செய்து வருகிறது. இந்த முறை வெளியான தகவல்களும், படங்களும் இந்த காரின் அம்சங்கள் குறித்து தெளிவான விவரங்களை அளிக்கின்றன. நீண்ட கண்ணாடி அமைப்பு மற்றும் நிமிர்ந்த பின் பகுதி ஆகியவை, கியா பிரீமியம் கார்கள் பிரிவில் ஒரு தரமான ஏழு இருக்கைகள் கொண்ட காரை தயார் செய்து வருவதை உறுதிப்படுத்துகின்றன.
இது கியாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் செல்டோஸ் (Seltos) காருக்கு மேல் நிலைநிறுத்தப்படும். இந்த புதிய 7-சீட்டர் காரின் சக்கர வடிவமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இரட்டை-நிறங்களில் 19-அங்குலத்தில் உள்ள அலாய் சக்கரங்கள் வெளிநாடுகளில் விற்கப்படும் கியா சொரெண்டோ (Sorento) ஹைபிரிட் காரில் உள்ள சக்கரங்களை ஒத்திருந்தன.

இது, சொரெண்டோவை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த கியா தயாராகிறது என்ற ஊகங்களையும் கிளப்பியுள்ளது. சொரென்டோவின் எலெக்ட்ரிக் வெர்சன் அதன் 19-அங்குல சக்கரங்களால் வேறுபடுத்தப்படுகிறது. இது இந்தியாவில் தற்போது காணப்பட்டுள்ள காருடன் மிகவும் ஒத்துப்போகிறது. உலகளவில் சொரெண்டோ ஹைபிரிட் சமீபத்தில் ஒரு பெரிய புதுப்பித்தலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சொரெண்டோ ஹைபிரிட் காரின் சில தனித்துவமான அம்சங்கள் தற்போது இந்தியாவில் காட்சி தந்துள்ள சோதனை காரிலும் காணப்படுகின்றன. வெளிநாடுகளில், சொரெண்டோ எஸ்யூவி கார் முன்பகுதியில் கூர்மையான விளக்குகள் வடிவமைப்புகளுடன், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட LED விளக்குகள் அமைப்பு மற்றும் கியாவின் 'ஸ்டார் மேப்-ஸ்டைல்' DRL-களுடன் வருகிறது.

இண்டர்ஸ்டெல்லார் கிரே, மினரல் ப்ளூ, சிட்டிஸ்கேப் கிரீன் மற்றும் மணல் போன்ற கலர் ஆப்ஷன்கள் சொரென்டோ காரில் வழங்கப்படுகின்றன. உட்புற கேபின் டஸ்ட் ப்ளூ தீம்-இல் வழங்கப்படுகிறது. கேபினுக்குள், வெளிநாட்டு சொரெண்டோ ஹைபிரிட் காரின் விலை குறைவான வேரியண்ட்களில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்க 4.3-அங்குல திரை மற்றும் 12.3-அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் இணைக்கப்பட்ட ஒரு பரந்த டேஷ்போர்டு பேனல் உள்ளது.
அதுவே உயர் வேரியண்ட்களில், இரண்டு 12.3-அங்குல திரைகளை ஒரே தொடர்ச்சியான அலகாக இணைக்கும் வளைந்த டேஷ்போர்டு பேனல் உள்ளது. இது இந்தியாவுக்கும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியாவின் சமீபத்திய ccNC மென்பொருளை இது இயக்குகிறது. இது விரைவான ரெஸ்பான்ஸ், மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் மற்றும் ஓவர்-தி-ஏர் புதுப்பிப்புகளை பெறும் திறனை வழங்குகிறது.
உலகளாவிய சொரெண்டோ கார் அடிப்படை வேரியண்டில் இருந்தே வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை பல USB-C போர்ட்களுடன் மூன்று வரிசைகளிலும் கொண்டுள்ளது. காற்றோட்டமான இருக்கைகள், சியூட் பூசப்பட்ட ரூஃப் லைனர் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் கீ 2.0 சிஸ்டம் போன்ற பிரீமியம் அம்சங்கள் டாப் SX-P கிரேடுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சொரெண்டோ ஹைபிரிட் காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் 44.2 kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 1.5 kWh பேட்டரி பேக்கையும் பயன்படுத்துகிறது. இவை இணைந்து 227 hp சக்தியையும் 250 Nm டார்க்கையும் உற்பத்தி செய்து, 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் ஆற்றலை அனுப்புகின்றன.
சர்வதேச அளவில் பெரும்பாலான வேரியண்ட்களில் முன்-சக்கர டிரைவ் (FWD) சிஸ்டம் ஆனது நிலையான அம்சமாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அனைத்து-சக்கர டிரைவ் (AWD) ஆப்ஷன் ஆனது குறிப்பிட்ட வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இந்த காரில் வழங்கப்படும் இயந்திர கற்றல் அடிப்படையிலான ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் ஆனது டிரைவரின் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப செயல்படும் திறனுடன், சமீபத்திய தலைமுறை ஹைவே டிரைவிங் அசிஸ்ட் ஆகியவை இந்த பேக்கேஜின் ஒரு பகுதியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவுக்கு கொண்டுவரும் இந்த காரை கியா எவ்வாறு சந்தைப்படுத்தும், டாப்-ஸ்பெக் வேரியண்ட் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் 7-சீட்டர் கார்களுக்கு தேவை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப இந்த புதிய கியா காருக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கலாம். இருப்பினும், ஹைப்ரீட் காராக அறிமுகம் செய்யப்படும் இதனை எத்தனை பேர் வாங்குவார்கள் என்பதை கார் விற்பனைக்கு வந்த பிறகே அறிய முடியும்.


Click it and Unblock the Notifications









