கியா உருவாக்கினா அதில் எதுனா குறை சொல்ல முடியுமா? வெளிநாட்டு கார்கள் கூட ஓரமா நிற்கணும்!!

கியா (Kia) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேரன்ஸ் க்ளாவிஸ் (Carens Clavis) கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. காரை பற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன, ஆனால் காரின் விலைகள் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. கியா கேரன்ஸ் கார் ஏற்கனவே இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் அப்கிரேட் (Upgrade) வெர்சனாக கேரன்ஸ் க்ளாவிஸ் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. பொதுவாக, இவ்வாறு அப்கிரேட் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டால், பழைய வெர்சன் நிறுத்திக் கொள்ளப்படுவது வழக்கம்.

ஆனால், புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் அறிமுகம் செய்யப்பட்ட பின்பும் தற்போதைய கேரன்ஸ் கார் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கேரன்ஸ் காரை சற்று அதிக விலையில் வாங்க விரும்புவோருக்காக புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் விற்பனை செய்யப்பட உள்ளது. இதனால், புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் விலையை தற்போதைய கேரன்ஸ் காரை காட்டிலும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

new kia carens clavis

கூடுதல் விலைக்கு ஏற்ப புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரை பிரீமியம் தரத்திலானதாக கியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் கேரன்ஸ் காருக்கும், புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

வெளிப்புற தோற்றம் & பரிமாண அளவுகள்: ஏற்கனவே கூறியதுபோல், புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரை பிரீமியம் தரத்திலானதாக கியா நிறுவனம் உருவாக்கியுள்ளது. கூடுதல் விலைக்கு ஏற்ப காரை காஸ்ட்லீயான லுக்கில் வழங்க கியா முயற்சித்து இருப்பதை கேரன்ஸ் க்ளாவிஸ் காரை பார்த்தாலே தெரிகிறது.

new kia carens clavis

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள கியாவின் மாடர்ன் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) ஆன இவி5 (EV5) மற்றும் இவி6 (EV6) போன்று கியாவின் லேட்டஸ்ட் 'எதிரெதிர் ஒன்றுப்பட்டன' (Opposites United) என்கிற டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், டிசைன்கள் சிலவற்றில் தற்போதைய கேரன்ஸ் காரையே புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் ஒத்துக் காணப்படுகிறது. கேரன்ஸ் காரில் முன்பக்கத்தில் Y-வடிவிலான டி.ஆர்.எல்-கள் மற்றும் நாற்கரம் வடிவிலான ஹெட்லைட்கள் வழங்கப்படுகின்றன. அதுவே, புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் இவை பனிக்கட்டி வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள் ஆகவும், L-வடிவ டிஆர்எல்-கள் ஆகவும் மாற்றப்பட்டுள்ளன.

ஹெட்லைட்கள் இரண்டையும் லைட்பார் ஒன்று இணைக்கும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் முன்பக்க பம்பரின் டிசைனும் மாற்றப்பட்டுள்ளது. கேரன்ஸ் காரில் முன்பக்க பம்பர் தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் கொடுக்கப்படும் நிலையில், புதிய கேரன்ஸ் கிளாவிஸ் காரில் காரின் உடல் நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், செவ்வக வடிவிலான ஏர் டேம்மை சுற்றிலும் கிளாடிங்ஸ் வழங்கப்பட்டுள்ளன. அப்படியே காருக்கு பக்கவாட்டிற்கு சென்றால், இரட்டை நிறங்களில் காட்சியளிக்கும் புதிய 17-இன்ச் அலாய் சக்கரங்கள் நம்மை வசீகரிக்கின்றன. கேரன்ஸ் காரில் 16-இன்ச்சில் மட்டும் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. முன்பக்கத்தை போல், கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் லைட்பார் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய டெயில்லைட் செட்-அப் நமக்கு கியா சொனெட் (Sonet) காரை தான் நினைவுப்படுத்துகிறது. புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் நீளம் 4550மிமீ, அகலம் 1800மிமீ, உயரம் 1708மிமீ மற்றும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு 2780மிமீ ஆகும். கேரன்ஸ் காரின் பரிமாண அளவுகள் எல்லாம் கிட்டத்தட்ட இதேதான். ஆனால், கேரன்ஸ் க்ளாவிஸ் கார் கூடுதல் 10மிமீ நீளத்தில் உள்ளது.

உட்புற தோற்றம் & வசதிகள்: வெளிப்புற தோற்றத்தில் புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கும், கேரன்ஸ் காருக்கும் இடையே பெரியதாக வித்தியாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உட்புற கேபினின் தோற்றத்தில் இவை இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. க்ளாவிஸ் காரின் கேபின் ஆனது கியாவில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சிரோஸ் (Syros) காரை ஒத்துக் காணப்படுகிறது.

புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் கேபினை டிரிடோன் நேவி மற்றும் பழுப்பு நிறத்தில் கியா வடிவமைத்துள்ளது. அழுத்தக்கூடிய பொத்தான்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தொடுதல் மூலமாக கண்ட்ரோல் செய்யும் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, கேரன்ஸ் காரில் தற்சமயம் 10.25 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை தனித்தனியாக வழங்கப்படுகின்றன.

ஆனால், புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரில் இரண்டும் ஒரே திரையாக 26.62 இன்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், கேரன்ஸ் காரில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மட்டுமே வழங்கப்படும் நிலையில், புதிய மாடலில் பனோராமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டுள்ளது. கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கு உள்ளே மற்றொரு கவர்ச்சிக்கரமான அம்சம் என்னவென்றால், 2வது வரிசை இருக்கையை ஒரு தொடுதல் மூலமாக இரண்டாக மடக்கிக் கொள்ளலாம் என்பதாகும்.

இதன் மூலமாக, 3வது இருக்கை வரிசையை எளிதாக அணுக முடியும் என்பதுடன், பொருட்களை வைத்து செல்லவும் இடவசதியை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், க்ளாவிஸ் காரில் லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. இந்த அடாஸ் மூலமாக டிரைவருக்கு தேவையான பல அதிநவீன வசதிகளை க்ளாவிஸ் காரில் கியா வழங்கியுள்ளது.

என்ஜின்: கேரன்ஸில் வழங்கும் அதே என்ஜின் ஆப்ஷன்களை தான் புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரிலும் கியா நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்படி, 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரிலும் வழங்கப்பட்டுள்ளன.

இதில், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. அதேநேரம் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உடன் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஐஎம்டி அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறலாம். இதில், டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் ஆனது பிரத்யேகமாக புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்காக வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காரின் வெளிப்பக்க தோற்றத்தில் புதிய டிசைன் தத்துவங்களை கியா பின்பற்றி இருப்பது கவர்ச்சிக்கரமான அம்சமாக அமைத்துள்ளது. அதேபோல், இந்த புதிய காருக்குள் டேஸ்போர்டில் திரைகள் இரண்டும் ஒன்றாக வழங்கப்பட்டு இருப்பதும் பார்க்கும் எவரொருவரையும் கவரக்கூடிய அம்சம் ஆகும். இதனால், தற்போதைய கேரன்ஸ் காருக்கு இணையாக புதிய கேரன்ஸ் க்ளாவிஸ் காருக்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 8, 2025, 23:59 [IST]
English summary
New kia carens clavis vs existing carens check full car comparisons here
மேலும்... #kia #kia carens #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+