புதிய கியா கார் பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்க வொர்த்தா? மேனுவல் காரை வாங்க நினைப்பவர்கள் இந்த பக்கம் வராதீங்க!
புதிய இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் (Kia Seltos), வியக்க வைக்கும் புதுமையான தோற்றத்துடன், ஏராளமான பிரீமியம் அம்சங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. கியா நிறுவனம் இந்த இரண்டாம் தலைமுறை செல்டோஸில் ஸ்டைலிங், உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 10 விதமான வேரியண்ட்களில் புதிய செல்டோஸ் விற்பனை செய்யப்பட உள்ளது.
அவையாவன, எச்.டி.இ (HTE), எச்டிஇ (ஆப்ஷனல்) (HTE (O)), எச்டிகே (HTK), எச்டிகே (ஆப்ஷனல்) (HTK (O)), எச்டிஎக்ஸ் (HTX), எச்டிஎக்ஸ் (ஏ) (HTX (A)), ஜிடிஎக்ஸ் (GTX), ஜிடிஎக்ஸ் (ஏ) (GTX (A)), எக்ஸ் லைன் (X Line) மற்றும் எக்ஸ் லைன் ஏ (X Line A) என்பன ஆகும்.

இதில், ஜிடிஎக்ஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் (ஏ) ஆகிய டாப் வேரியண்ட்களை மட்டும் எக்ஸ் லைன் ஸ்டைலிங் பேக்கிற்கு மேம்படுத்தி பெற முடியும். புதிய செல்டோஸில் கியா வழங்க விரும்பிய அனைத்து அம்சங்களுடனும் கிடைக்கும் இந்த ஜிடிஎஸ், ஜிடிஎக்ஸ் (ஏ) மற்றும் எக்ஸ் லைன் வேரியண்ட்களை பற்றியும், அவற்றில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை பற்றியும் தான் இந்த தொகுப்பில் கொஞ்சம் விரிவாக பார்க்க போகிறோம்.
ஜிடிஎஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் (ஏ) வேரியண்ட்கள்: டாப் வேரியண்ட்களான இவை முன்பக்கத்திலும், பக்கவாட்டு மற்றும் பின்புறத்திலும் ஸ்போர்ட்டியான ஸ்டைலிங்கைப் பெற்றுள்ளன. காரை சுற்றிலும் தனித்துவமான கன்மெட்டல் ஹைலைட்கள், பக்கவாட்டு கதவு கார்னிஷ், 18-இன்ச் ஸ்போர்ட்டியான க்ரிஸ்டல்-கட் அலாய் சக்கரங்கள் மற்றும் நியான் பிரேக் காலிப்பர்கள் இதில் அடங்கும்.

உட்புற அம்சங்களாக லெதரெட் இருக்கைகள், 10-வழி பவர் அட்ஜெஸ் வசதி & மெமரி ஃபங்க்ஷன் உடன் கூடிய லம்பார் டிரைவர் சீட் உள்ளிட்டவை கிடைக்கும். காரின் பின்புறத்தை காட்டும் வெளிப்புற பக்கவாட்டு கண்ணாடிகளும் (ORVM) மெமரி ஃபங்க்ஷன் உடன் மட்டுமன்றி, ஆட்டோ ரிவர்ஸ் அம்சத்துடனும் கிடைக்கும்.
எக்ஸ்-லைன் ஸ்டைலிங் பேக்: ஏற்கனவே கூறியதுபோல், ஜிடிஎஸ் அல்லது ஜிடிஎஸ் (ஏ) வேரியன்ட்களை வாங்குபவர்கள் எக்ஸ்-லைன் ஸ்டைலிங் பேக்கையும் கூடுதல் தொகையை செலுத்தி தேர்வு செய்யலாம். இதில் கிளாசிக்கான கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்ட முன் & பின்பக்க ஸ்கிட் பிளேட்கள் உடன் ஜிடிஎக்ஸ் வேரியண்ட்களில் கிடைப்பதை போன்று டார்க் கன்மெட்டல் ஹைலைட்கள் கொண்ட பக்கவாட்டு கதவு கார்னிஷ் தனித்துவமான அம்சமாக கிடைக்கும்.
| தொழிற்நுட்ப அம்சங்கள் | GTX | X-line | GTX(A) | X-line(A) |
|---|---|---|---|---|
| 30.48 cm (12") Full Segment LCD Cluster with Advanced 10.5 cm (4.2") Color TFT MID | Yes | Yes | — | — |
| 31.24cm (12.3") HD Display Instrument Cluster | — | — | Yes | Yes |
| 26.04cm (10.25") HD Touchscreen | — | — | — | — |
| 31.24cm (12.3") HD Touchscreen | Yes | Yes | Yes | Yes |
| 12.7cm (5") Touch Screen - Dual Zone Automatic Temperature Control | Yes | Yes | Yes | Yes |
| Smartphone Wireless Charger | Yes | Yes | Yes | Yes |
| Wireless Android Auto/Apple CarPlay | Yes | Yes | Yes | Yes |
மேலும், சாட்டின் மெட்டல் ஹைலைட்களுடன் கூடிய இரட்டை நிறங்களில் கேபின் இன்டீரியர்கள், இரட்டை நிறங்களில் லெதரெட் இருக்கைகள் மற்றும் கருப்பு நிற பெயின்ட் செய்யப்பட்ட 18-இன்ச் அலாய் சக்கரங்களும் செல்டோஸ் எக்ஸ்-லைன் வேரியண்ட்களில் கிடைக்கும். இந்த எக்ஸ்-லைன் வேரியண்ட்களுக்கு பிரத்யேகமான 'மேட் கிராஃபைட்' மற்றும் 'அரோரா பிளாக் பேர்ல்' என்ற கலர் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய செல்டோஸின் மற்ற வேரியண்ட்கள் அனைத்திலும் 12 இன்ச் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படும் நிலையில், ஜிடிஎக்ஸ் (ஏ) மற்றும் எக்ஸ் லைன் (ஏ) வேரியண்ட்களில் மட்டும் இந்த திரை 12.3 இன்ச்சில் கிடைக்கும். புதிய 2026 கியா செல்டோஸ் காரில் வேரியண்ட்டை பொறுத்து என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
| என்ஜின் தேர்வுகள் | GTX | X-line | GTX(A) | X-line(A) |
|---|---|---|---|---|
| Smartstream G1.5 6MT | — | — | — | — |
| Smartstream G1.5 IVT | Yes | Yes | Yes | Yes |
| Smartstream G1.5 T-GDI 6iMT | — | — | — | — |
| Smartstream G1.5 T-GDI 7DCT | Yes | Yes | Yes | Yes |
| 1.5L CRDI VGT 6MT | — | — | — | — |
| 1.5L CRDI VGT 6AT | - | - | Yes | Yes |
டாப்-ஸ்பெக் ஜிடிஎக்ஸ் (ஏ) மற்றும் எக்ஸ் லைன் (ஏ) வேரியண்ட்களில், மூன்று என்ஜின் ஆப்ஷன்களும் அவற்றிற்கான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் மட்டுமே கிடைக்கும். இந்த டாப் வேரியண்ட்களில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்காது. ஜிடிஎக்ஸ் மற்றும் எக்ஸ் லைன் வேரியண்ட்களில் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்காதது மட்டுமன்றி, இந்த வேரியண்ட்களை டீசல் என்ஜின் ஆப்ஷன் இல்லாமல் மற்ற இரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2026 கியா செல்டோஸ் இந்திய கார்கள் மார்க்கெட்டில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வருகிறது. இந்த காரில் பல அடிப்படை மாடர்ன் வசதிகள் வழங்கப்படுகின்றன. அவை இந்த காரின் எண்ட்ரி-லெவல் எச்டிஇ வேரியண்ட்களில் இருந்தே கிடைக்கின்றன. இந்த தொகுப்பில் நாம் காரின் டாப் வேரியண்ட்களை பற்றி மட்டும் பார்த்ததால் அந்த அடிப்படை அம்சங்களை பற்றி பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








