காரை வெளியீடு செய்ய ரோமிற்கு சென்ற நிறுவனம்.. அட்வான்ஸ்டு ஏஐ தொழில்நுட்பத்தை எல்லாம் தந்திருக்காங்க!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய புதுமுக கார் மாடலை வெளியீடு செய்ய ரோம் நகரத்திற்கு சென்றிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), இதுவே அந்த நிறுவனம் ஆகும். புதிய சிஎல்ஏ (CLA) எனும் சொகுசு கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. மிகவும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களைத் தாங்கிய கார் மாடலாக இதனை அந்நிறுவனம் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக முக்கியமாக ஏஐ (AI) தொழில்நுட்பத்தை எல்லாம் இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இது கார் ஆர்வலர்களுக்கு ஆச்சரியத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல இதுபோல இன்னும் பல நம்ப முடியாத அம்சங்களை புதிய சிஎல்ஏ ஆடம்பர காரில் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்கி இருக்கின்றது. உலக சொகுசு கார் சந்தையில் விரைவிலேயே இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.

இதனை முன்னிட்டே ரோம் நகரில் வைத்து இந்த காரை வெளியீடு செய்திருக்கின்றனர். இந்த காரின் வெளியீட்டு நிகழ்ச்சியில் உலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர். ரோமியோ பெக்கம், கேமில்லா கேபெல்லா, ஐஸ் ஸ்பைஸ், அசாப் நாஸ்த் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
மேலும், சில சுவாரஷ்ய நிகழ்ச்சியும் அங்கே நிகழ்த்தப்பட்டது. தெற்கு ஆப்பிரிக்கா பாடகர் டைலா-வின் பாடல் கச்சேரி நிகழ்ச்சிகூட அங்கே நடைபெற்றது. இவ்வாறு மிகப் பெரிய விழா போன்ற கொண்டாட்டத்திற்கு மத்தியிலேயே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தன்னுடைய சிஎல்ஏ ஆடம்பர காரை வெளியீடு செய்தது.

இந்த காரை இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைச் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டு இருக்கின்றது. ஹைபிரிட் வெர்ஷன் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகியவையே அவை ஆகும். இரண்டுமே லுக்கில் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதாவதும் மிகவும் அட்டகாசமான ஸ்டைலிலேயே இந்த காரை தயார் செய்திருக்கின்றனர்.
மிகவும் சரிவான மேற்கூரை, டோருடன் டோராக இருக்கும் கை பிடிகள், ஃப்ரேம்கள் இல்லா ஜன்னல்கள், காரின் அடிப் பக்கத்தை அலங்கரிக்கும் விதமாக கட்டுமஸ்தான லைன்கள் உள்ளிட்டவற்றை வழங்கி இருக்கின்றனர். மிக முக்கியமாக தனித்துவமான எல்இடி லைட்டுகள் முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கி இருக்கின்றனர்.

மேலும், அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக 17 அங்குல அலாய் தொடங்கி 19 அங்குல அலாய் வீல் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல், இதன் உட்பக்கத்தை அலங்கரிக்கும் விதமாக 14.6 அங்குல திரை ஒன்றும், 14 அங்குல பயணிகளுக்கான திரை ஒன்றும், 10.25 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் திரை ஒன்றும் என மூன்று விதமான திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ப்ளஷ் வகை இருக்கைகள், குவாலிட்டியான மெட்டீரியல்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் அதிக ஸ்டோரேஜ் வசதிக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. முன் பக்கம் மற்றும் பின் பக்கம் என இரண்டிலும் ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், ஹைபிரிட் வெர்ஷனில் பின் பக்கத்தில் மட்டுமே ஸ்டோரேஜ் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் ஹைபிரிட் வெர்ஷனில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்தே 48 வோல்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை வழங்கி இருக்கின்றனர்.
27 பிஎச்பி மோட்டார் மற்றும் 1.3 kWh திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே இதன்கீழ் வழங்கி இருக்கின்றனர். இதன் முழு எலெக்ட்ரிக் வெர்ஷன் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. சிங்கிள் மோட்டார், ரியர் வீல் டிரைவ் அம்சம் மற்றும் இரட்டை மோட்டார் அனைத்து வீல் டிரைவ் ஆகியவையே அந்த ஆப்ஷன்கள் ஆகும்.
ஒற்றை மோட்டாரை கொண்டிருக்கும் தேர்வு அதிகபட்சமாக 268 பிஎச்பி மற்றும் 335 என்எம் டார்க்கையும் உருவாக்கும். மேலும், இதில் ஓர் முழு சார்ஜில் 792 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், டூயல் மோட்டார் வெர்ஷன் ஓர் முழு சார்ஜில் 771 கிமீ ரேஞ்சை வழங்கும். இதேபோல் அதிகபட்சமாக 350 பிஎச்பி மற்றும் 515 என்எம் டார்க் ஆற்றலையும் உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் இரண்டும் பார்க்க அழகாதனாகக் காட்சியளிக்கின்றன. அதேவேளையில், இரண்டிற்கும் இடையில் சற்றே வித்தியாசத்தைப் பார்க்க முடிகின்றது. எலெக்ட்ரிக் வெர்ஷனில் உள்ள பேட்ஜ் மற்றும் கிரில் ஆகியவற்றிலேயே சில மாற்றங்கள் உள்ளன. இத்துடன், இ-கார் வெர்ஷனில் சார்ஜ் செய்வதற்கான இடமும் இடம் பெற்றிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









