ரெண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும், விலையில் பெரிய வித்தியாசம் இருக்கு! இதை எல்லாம் தெரியாம வாங்கிடாதீங்க

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் காராக சைபர்ஸ்டர் (Cyberster) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அதிவேகமாக இயங்கக்கூடிய எம்ஜி காராகவும், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காராகவும் ரூ.74.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் எம்ஜி சைபர்ஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக எந்த எலக்ட்ரிக் காரும் இல்லை என்றாலும், விலையை பொறுத்தவரையிலும் தோற்றத்தை பொறுத்தவரையிலும் பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனத்தின் இசட்4 (Z4) காரும், மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் சி.எல்.இ கேப்ரியோலெட் (CLE Cabriolet) காரும் போட்டியாக உள்ளன.

mg cyberster vs bmw x4

ஏனெனில், இவை இரண்டுமே மேற்கூரையை தேவைக்கேற்ப திறந்து மூடக்கூடிய 'கேப்ரியோலெட்' ரக கார்களாகும். இதில், மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்இ கேப்ரியோலெட் கார் ரூ.1.10 கோடியில் எம்ஜி சைபர்ஸ்டரை காட்டிலும் சற்று அதிக எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்டுள்ளதால், இந்த தொகுப்பில் எம்ஜி சைபர்ஸ்டர் எலக்ட்ரிக் காருக்கும், பிஎம்டபிள்யூ இசட்4 காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.

விலை: எம்ஜி சைபர்ஸ்டர் ஆனது ஜிடி என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிஎம்டபிள்யூ இசட்4 கார் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், விலை குறைவான எம்40ஐ (M40i) வேரியண்ட்டை வாங்குபவர்கள் எம்ஜி சைபர்ஸ்டரை வாங்க திட்டமிடலாம். ஏனெனில், எம்40ஐ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை தான் சைபர்ஸ்டருக்கு ஓரளவிற்கு இணையாக ரூ.92.90 லட்சத்தில் உள்ளது.

mg cyberster vs bmw x4

இயக்க ஆற்றல்: பிஎம்டபிள்யூ இசட்4 ஆனது பெட்ரோல் கார் ஆகும். ட்வின்பவர் டர்போ 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் உருவாக்கப்படும் இந்த பிஎம்டபிள்யூ கார் விலையுயர்ந்ததாக இருப்பினும், சைபர்ஸ்டரை விட இந்த காரில் சற்று குறைவான இயக்க ஆற்றலே கிடைக்கிறது. சைபர்ஸ்டரில் அதிகப்பட்சமாக 503 பிஎச்பி மற்றும் 725 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம் என எம்ஜி தெரிவித்து இருக்கும் நிலையில், இசட்4 காரின் என்ஜின் அதிகப்பட்சமாக 335 பிஎச்பி மற்றும் 500 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

பரிமாண அளவுகள்: புதிய எம்ஜி சைபர்ஸ்டரை காட்டிலும் பிஎம்டபிள்யூ இசட்4 கார் 211மிமீ நீளத்திலும், 49மிமீ அகலத்திலும், 25மிமீ உயரத்திலும் சிறியது ஆகும். ஆனால், பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பூட் ஸ்பேஸ் (Boot Space) ஆனது சைபர்ஸ்டரில் 250 லிட்டர்கள் கொள்ளளவிலும், இசட்4 காரில் சற்று பெரியதாக 281 லிட்டர்கள் கொள்ளளவிலும் வழங்கப்படுகிறது.

மற்ற சிறப்பம்சங்கள்: பிஎம்டபிள்யூ இசட்4 காரில் 5 கதவுகள் வழங்கப்படுகின்றன; ஆனால் சைபர்ஸ்டரில் 2 கதவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், சைபர்ஸ்டரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படும் நிலையில், இசட்4 காரில் இரு ஸோன்களில் மட்டுமே க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்படுகிறது. டிரைவ் மோட்கள் (Drive Modes) சைபர்ஸ்டரில் நான்கு வழங்கப்பட்டுள்ளன; ஆனால் இசட்4 காரில் மூன்று மட்டுமே வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி சைபர்ஸ்டர் காரை பற்றிய முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆதலால்தான், இந்த புதிய எம்ஜி எலக்ட்ரிக் காருக்கும், பிஎம்டபிள்யூ இசட்4 காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை முழுமையாக விவரிக்க முடியவில்லை. இந்த இரு கார்களில் எதை வாங்குவது என குழப்பமாக இருந்தால், எலக்ட்ரிக் கார் வேண்டுமா அல்லது பெட்ரோல் கார் வேண்டுமா என்கிற கேள்விக்கு பதிலை தேடினாலே போதும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 25, 2025, 19:53 [IST]
English summary
New mg cyberster vs bmw z4 check full car comparison here
மேலும்... #car comparison #mg motor #bmw #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+