10ஜிபி RAM எல்லாம் கொடுத்தாங்க என்றால் வேற லெவல்... டாடா, மஹிந்திராவுக்கு பயத்தை காட்டும் எம்ஜி!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், தனது பிரபலமான ஹெக்டர் (Hector) எஸ்யூவி காருக்கு ஒரு பெரிய அப்டேட்டை வழங்க தயாராகி வருகிறது. வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வந்துள்ள புதிய தகவல்கள் 2026 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காரின் உட்புறத்தில், குறிப்பாக இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் கனெக்டட் டெக் (Connected Tech) தொகுப்பில், ஒரு பெரிய மேம்பாடு கொண்டுவரப்பட உள்ளது என்பதைக் காட்டுகின்றன.

புதிய எம்ஜி ஹெக்டர், மேம்பட்ட மற்றும் உயர் செயல்திறன் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மென்மையான மற்றும் உள்ளுணர்வுமிக்க பயனர் அனுபவத்தை வழங்கும். இந்த சிஸ்டம் 10GB RAM வரை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த பிரிவில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த இன்-கார் யூனிட்களில் ஒன்றாக அமையும்.

new mg hector facelift spotted

இந்த குறிப்பிடத்தக்க செயலாக்க திறன், வேகமான ரெஸ்பான்ஸ் உடன் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடியதாக, தடையற்ற யூஸர் இண்டர்ஃபேஸ் (User Interface - UI)-ஐ உறுதி செய்யக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, எம்ஜி நிறுவனம் மின்விசிறி வேகம் மற்றும் இசை ப்ளேபேக் போன்ற செயல்பாடுகளுக்கு மல்டி-டச் ஜாஸ்டர் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

இந்த அம்சங்கள் ஸ்மார்ட்போன் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும் அனுபவத்தை வழங்கும். முன்னதாக சமீபத்தில், 2026 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் நிறுவனத்தின் வதோதரா ஆலையைச் சுற்றி சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட வாகனம் பகுதியளவு மறைக்கப்பட்டிருந்தது. அப்போது கிடைக்க பெற்ற ஸ்பை படங்களின் மூலம், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன் மற்றும் பின் பம்பர்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில்லை புதிய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தின.

new mg hector facelift spotted

சிக்னேச்சர் எல்இடி டிஆர்எல்-கள் மற்றும் ஹெட்லேம்ப் அசெம்பிளி உட்பட, ஷீட் மெட்டல் பேனல்கள் மற்றும் விளக்குகள் தற்போதைய ஹெக்டர் காரில் இருந்து மாறாமல் உள்ளன. சந்தையில் உள்ள போட்டியாளர்களைப் போல, 19 அங்குல அளவுடைய புதிய அலாய் சக்கரங்களும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஹெக்டர் காரில் ஏற்கனவே பெரிய 14-இன்ச் போர்ட்ரெய்ட் டச்ஸ்கிரீன் உள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் காரில் இவை மேலும் மேம்படுத்தப்படும். மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் வன்பொருளுடன், ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் காரில் முன் மற்றும் பின் வரிசைகளுக்கு வென்டிலேட்டட் இருக்கைகள், மேம்பட்ட டச் ரெஸ்பான்ஸ், விரிவுபடுத்தப்பட்ட ADAS தொகுப்பு மற்றும் மேம்பட்ட கனெக்டட்-கார் அம்சங்களையும் எம்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தலாம்.

மற்றப்படி, ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் செய்யப்படும் ஹெக்டர், தற்போதுள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் தொடரும் என்று தெரிகிறது. இந்த மாடல் டாடா ஹாரியர் & சஃபாரி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 போன்ற போட்டியாளர்களை மீண்டும் எதிர்கொள்ளும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கனெக்டட் மொபிலிட்டி மற்றும் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் அனுபவங்கள் மீது எம்ஜி மோட்டார் கொண்டுள்ள தொடர்ச்சியான கவனத்தை இந்த மேம்பாடுகள் காட்டுக்கின்றன. இது இந்தியாவில் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எஸ்யூவி கார்களில் ஒன்றாக ஹெக்டரின் நிலையை பலப்படுத்தும்.

அடுத்த தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நுட்பமான வெளிப்புற மேம்பாடுகள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் 2026 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட், எம்ஜியின் எரிபொருள் என்ஜின் எஸ்யூவி கார்களின் உத்தியில் ஒரு முக்கியமான படியாக அமைய உள்ளது. இதன் இன்-கார் அனுபவத்தை இவியின் தொழில்நுட்ப நேர்த்திக்கு இணையாக உயர்த்த எம்ஜி இலக்கு கொண்டுள்ளது தெளிவாகிறது.

இந்த ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் ஆனது நவீனமயமாக்கப்பட்ட தொழில்நுட்ப தொகுப்புடன் இணைந்து, போட்டி மிகுந்த இந்த பிரிவில் மீண்டும் ஹெக்டரின் விற்பனையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஒரு ஆண்டில், எம்ஜி ஹெக்டரின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. ஹெக்டர் கார்கள் விற்பனை 21,474 யூனிட்டுகளில் இருந்து 8,414 யூனிட்டுகளாகக் குறைந்த நிலையில், 2025 அக்டோபரில் வெறும் 225 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி, கடந்த 12 மாதங்களில் மிகக் குறைந்த விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 8, 2025, 11:44 [IST]
English summary
New mg hector facelift spotted with 10gb ram infotainment system check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+