குறைந்த விலையில் எலக்ட்ரிக் காரை கொடுத்து மக்களை எம்ஜி வளைச்சு போட்டுடுச்சு! டாடா, ஹூண்டாய் அண்ணாந்து பார்க்க!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக விண்ட்சர் இவி புரோ (Windsor EV Pro) எலக்ட்ரிக் கார் (Electric Car) மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விண்ட்சர் இவி புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை கூடுதல் பிரீமியம் தரத்திலான அம்சங்களுடன், கூடுதல் பவர் ஃபுல்லானதாக வாங்க விரும்புவோர் புதிய விண்ட்சர் இவி புரோ காரை வாங்கலாம்.

இதன் மூலமாக அனைத்து விதமான கஸ்டமர்களையும் கவர்வது என்பதுதான் எம்ஜி மோட்டாரின் நோக்கமாக உள்ளது. எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காருக்கு அதன் அறிமுகத்தில் இருந்தே மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முயற்சியாக விண்ட்சர் இவி புரோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விண்ட்சர் இவி புரோ காரை அப்பர்-மிடில்-கிளாஸ் மக்களும், செல்வந்தர்களும் விரும்பி வாங்குவர் என எதிர்பார்க்கிறோம்.

mg windsor ev pro rivals

எம்ஜி விண்ட்சர் இவி காரை போன்று, புதிய விண்ட்சர் இவி புரோ காருக்கும் ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் (Hyundai Creta Electric) மற்றும் டாடா கர்வ் இவி (Tata Curvv EV) உள்ளிட்ட மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள எலக்ட்ரிக் கார்கள் போட்டியாக இருக்கும். இந்த மூன்று எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம்.

விலை: புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த காரை வாங்கும் முதல் 8 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஆகும். அதன்பின் காரின் விலை அதிகரிக்கப்படும். மேலும், இந்த ரூ.17.49 லட்சமானது பேட்டரி உடன் இந்த புதிய எலக்ட்ரிக் காரின் விலை ஆகும்.

பேட்டரி இல்லாமல், BaaS (Batter-as-a-Service) முறையில் விண்ட்சர் இவி புரோ காரை வாங்கினால், காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.49 லட்சம் ஆகும். இவ்வாறு BaaS முறையில் வாங்கும்போது, பேட்டரியை குத்தகை முறையில் வாங்க வேண்டியிருக்கும். அதாவது, பேட்டரியின் சார்ஜை எவ்வளவு பயன்படுத்தினோமோ அந்த அளவிற்கு கட்டணத்தை செலுத்தி, சார்ஜ் நிரப்பப்பட்ட மற்றொரு பேட்டரியை வாங்க வேண்டியிருக்கும்.

இதே BaaS முறையில் தான் வழக்கமான எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான முறையில் வாங்கவே மக்கள் அதிகம் விரும்புவதன் காரணமாகவே எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் கார் குறுகிய காலத்திலேயே சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் ஹூண்டாய் மற்றும் டாடா எலக்ட்ரிக் கார்கள் இவ்வாறான முறையில் விற்பனை செய்யப்படுவது இல்லை.

hyundai creta electric

கடந்த ஜனவரி மாதத்தில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17.99 லட்சம் - ரூ.24.37 லட்சமாக உள்ளன. அதேநேரம், கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.17.49 லட்சத்தில் இருந்து ரூ.21.99 லட்சம் வரையில் உள்ளன.

எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி: புதிய விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான 52.9kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பொருத்தப்படும் எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் அதிகப்பட்சமாக 134 எச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.

மறுப்பக்கம், ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் ஒன்றான 42kWh பேட்டரி ஆனது 133 எச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், 51.4kWh பேட்டரி 168.6 எச்பி மற்றும் 200 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் வெளிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளன.

இதேபோன்று, டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரிலும் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், 45kWh பேட்டரியின் மூலம் 148 எச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும், அளவில் பெரியதான 55kWh பேட்டரியின் மூலம் 164.7 எச்பி மற்றும் 215 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலையும் பெறலாம்.

tata curvv ev

ரேஞ்ச் (Range): புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரில் அதிகப்பட்சமாக 449கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என சான்றளிக்கப்பட்டு உள்ளது. அதாவது, காரின் பேட்டரியை முழுவதுமாக 100% சார்ஜ் நிரப்பினால் அது 0% வரும் வரையில் அதிகப்பட்சமாக காரை இயக்கி செல்லக்கூடிய தொலைவு 449கிமீ ஆகும். இது ARAI சோதனையின் மூலம் பெறப்பட்ட மதிப்பீடு ஆகும்.

நிஜ உலகில் சாலையின் தரம், டிரைவிங் ஸ்டைல் உள்ளிட்டவற்றை பொறுத்து இந்த ரேஞ்ச் குறைவாக இருக்கும். ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் ஆனது 42kWh பேட்டரி உடன் 390கிமீ மற்றும் 51.4kWh பேட்டரி உடன் 473கிமீ ஆகும். டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 45kWh பேட்டரி உடன் 430கிமீ மற்றும் 55kWh பேட்டரி உடன் 502கிமீ ஆகும்.

பாதுகாப்பு அம்சங்கள்: புதிய விண்ட்சர் இவி புரோ கார் உள்பட ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் மற்றும் டாடா கர்வ் இவி என மூன்று எலக்ட்ரிக் கார்களிலும் மிக முக்கியமான பாதுகாப்பு அம்சமாக லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலினால் இந்த மூன்று மாடர்ன் எலக்ட்ரிக் கார்களிலும் 6 ஏர்பேக்குகள் (Airbags) வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை பொறுத்தவரையில், இந்த மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளன. இதனால், விலையை பொறுத்து இவை மூன்றில் ஒன்றை தேர்வு செய்வது சற்று சிரமமான காரியம் ஆகும். இதற்கேற்ப இவற்றில் பொருத்தப்படும் பேட்டரியின் திறனும் சரி, பாதுகாப்பு அம்சங்களும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக உள்ளன. இருப்பினும், BaaS வசதி உடன் புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ காரின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 7, 2025, 23:59 [IST]
English summary
New mg windsor ev pro vs tata curvv ev vs hyundai creta electric
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X