கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத குறைவான விலை! சிங்கிள் சார்ஜில் 530 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி மோட்டார் (MG Motor). கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில், எம்ஜி4 இவி (MG4 EV) என்ற எலெக்ட்ரிக் காரை, எம்ஜி மோட்டார் நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. அதன் பின் இந்த எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை. எனினும் சீனாவில் தற்போது புதிய எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் காரை, எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ரஸ்லேன் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருப்பது எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் காரின் 2வது தலைமுறை மாடல் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் முதல் தலைமுறை மாடல் அங்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2வது தலைமுறை எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) வழங்கப்பட்டுள்ளன. 42.8 kWh மற்றும் 53.9 kWh லித்தியம் அயன் பாஸ்பேட் பேட்டரிகள் ஆகும். இவற்றின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) முறையே 437 கிலோ மீட்டர்கள் மற்றும் 530 கிலோ மீட்டர்களாக உள்ளது.
ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் 2 பேட்டரிகளையுமே, வெறும் 20 நிமிடங்களில், 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். இவை தவிர, 70 kWh செமி சாலிட் ஸ்டேட் பேட்டரி ஆப்ஷனும், கூடிய விரைவில், 2வது தலைமுறை எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளது.

இதன் மூலமாக செமி சாலிட் ஸ்டேட் பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ள உலகின் முதல் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை, 2வது தலைமுறை எம்ஜி4 இவி பெறவுள்ளது. இந்த பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 537 கிலோ மீட்டர்களாக இருக்கும். நீண்ட ஆயுட்காலம் மற்றும் அதிக ஆற்றல் அடர்த்தி போன்றவை எல்லாம் செமி சாலிட் ஸ்டேட் பேட்டரியின் மிக முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும்.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) போன்றவை எல்லாம், 2வது தலைமுறை எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் காரின் மிக முக்கியமான அம்சங்களாக உள்ளன.
சீன சந்தையில் 2வது தலைமுறை எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 68,800 யுவான்கள் மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 8.50 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் சீன சந்தையில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலையும் கூட வெறும் 1,02,800 யுவான்களாக மட்டுமே இருக்கிறது.
இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 12.71 லட்ச ரூபாய் மட்டுமே. இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த ஒரு தயாரிப்பாக 2வது தலைமுறை எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் கார் கருதப்படுகிறது. எனவே இந்த எலெக்ட்ரிக் காருக்கு சீன சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் விலை குறைவான அதே நேரத்தில் அதிக டிரைவிங் ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட் உள்ளது. எனவே எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
புதிய எம்ஜி4 இவி எலெக்ட்ரிக் கார், எதிர்காலத்தில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








