ஜனவரி 26 வரை காத்திருந்தால் போதும்... குறைந்த விலையில் 5 பேர் தாராளமாக போக கூடிய காரை களமிறக்கும் ரெனால்ட்!!

இந்திய சந்தையில் மீண்டும் டஸ்டர் எஸ்யூவி (Duster SUV) காரை அறிமுகப்படுத்துவதாக ரெனால்ட் இந்தியா (Renault India) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தினத்தின்போது புதிய தலைமுறை டஸ்டர் எஸ்யூவி காரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்திய நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற போதிலும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் டஸ்டரின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டில் ரெனால்ட் டஸ்டர் மீண்டும் இந்தியாவிற்கு திரும்புகிறது. புதிய டஸ்டர், ரெனால்ட்டின் 'சர்வதேச விளையாட்டுத் திட்டம் 2025'-ன் கீழ் அறிமுகப்படுத்தப்படும் முதல் தயாரிப்பாகும்.

renault duster suv india debut on 2026 republic day

டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி நவம்பர் 25 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் வெளியான சூழலில் தற்போது ரெனால்ட் நிறுவனத்திடம் இருந்து இப்படியொரு அறிவிப்பு வந்துள்ளது. புதிய டஸ்டர், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட் போன்ற எஸ்யூவி கார் மாடல்களுடன் போட்டியிடும்.

அறிமுகத்திற்கு முன்பே, சர்வதேச சந்தையில் வெளியாகி, இந்தியாவிலும் பலமுறை சோதனை ஓட்டங்களில் ஓட்டி பார்க்கப்பட்ட புதிய டஸ்டர் சர்வதேச மாடலை ஒத்த புதிய வடிவமைப்புடன் வரவிருக்கிறது. இதில் V- வடிவ டெயில் லேம்ப்கள், அகலமான வீல் ஆர்ச் கிளாடிங், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, ரூஃப் ரெயில்கள், பின்பக்க வைப்பர் மற்றும் சாய்வான விண்ட்ஷீல்டு ஆகியவை அடங்கும்.

renault duster suv india debut on 2026 republic day

முன்புறத்தில், புதிய ரெனால்ட் டஸ்டர் Y-வடிவ எல்இடி விளக்குகள் கொண்ட செங்குத்தான வடிவமைப்பு, புல் பார் போன்றதான கிரில் மற்றும் வளைவான பொனெட் ஆகியவற்றைப் பெற்றுவர உள்ளது. சாய்வான வீல் ஆர்ச்கள், டர்ன் சிக்னல்களுடன் கூடிய பக்கவாட்டு கண்ணாடிகள், கருமை நிற B-தூண்கள் மற்றும் பாரம்பரிய கதவு கைப்பிடிகள் போன்ற அம்சங்களும் புதிய டஸ்டரில் வழங்கப்பட உள்ளன.

உலகளவில் கிடைக்கும் ரெனால்ட் டஸ்டரில் பல என்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில், 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் இணைந்து 128.2 hp ஆற்றலை வழங்குகிறது. இது இல்லாமல், 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் வெளிநாட்டு சந்தைகளில் கிடைக்கிறது.

renault duster suv india debut on 2026 republic day

இந்த 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களில் பொருத்தப்படும். அதாவது, இந்த வேரியண்ட்களில் என்ஜினுடன் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படும். இந்த இரண்டு மின் மோட்டார்களுடன் இணைந்து 1.2kWh பேட்டரி மூலம் 138 hp வரையிலான ஆற்றலை என்ஜின் சிஸ்டம் வெளியிடுகிறது. கூடுதலாக, 1.0 லிட்டர் பெட்ரோல்-எல்பிஜி என்ஜின் ஆப்ஷனும் 98.6 hp இயக்க ஆற்றலுடன், 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல்-வீல் டிரைவ் அமைப்புடன் வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே ரெனால்ட் நிறுவனம் போராடி வருகிறது. இருப்பினும், இந்த பிரெஞ்சு கார் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் இந்தியாவில் ஓரளவிற்கு சுமாராக விற்பனையான கார், டஸ்டர் எஸ்யூவி ஆகும். இதனாலேயே இதன் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலின் மீது கவனம் ஏற்பட்டுள்ளது. 2026 ஜனவரி 26இல் வெளியீடு செய்யப்படும் இந்த கார், அதன்பின் சில மாதங்கள் கழித்து அதிகாரப்பூர்வமாக விலைகள் அறிவிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 28, 2025, 16:54 [IST]
English summary
New renault duster suv india debut on 2026 republic day with new design and features
மேலும்... #renault #renault duster #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X