ஸ்கோடா கம்பெனி பற்றி தெரியாதவர்களை கூட வாங்க வைத்த கார்... மொத்தமா ஆளே மாறி வருகிறது!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக காரான குஷாக் (Kushaq), புதிய வசதிகளுடன் விரைவில் குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) காராக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது கேமராவில் சிக்கியுள்ளது.

2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக், கடந்த சில ஆண்டுகளாக இந்திய விற்பனையில் ஸ்கோடா நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்.க்யூ.பி ஏ0 இந்தியா (MQB A0 IN) பிளாட்ஃபார்மில் உருவான குஷாக், ஸ்லாவியா (Slavia) கார் உடன் இந்தியாவில் ஸ்கோடாவின் விற்பனையை கணிசமாக உயர்த்தியுள்ளது.

skoda kushaq facelift spotted while testing

இந்த இரண்டு கார்களும் இந்தியச் சந்தையில் ஸ்கோடா பிராண்டை மீண்டும் நிலைநிறுத்தி வருகின்றன. இதே வளர்ச்சி ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் டைகுன் (Taigun) மற்றும் விர்டுஸ் (Virtus) கார்களுக்கும் கிடைத்து வருகிறது. இருப்பினும், 4 வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக்கிற்கு இப்போது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் தேவைப்படுகிறது.

இதனை முன்னரே யூகித்த ஸ்கோடா நிறுவனம் அதற்கான வேலைகளில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது. அதன் ஒருபகுதியாக, மும்பை- புனே விரைவுச்சாலையில் புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று அடர்த்தியான மறைப்பால் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், மறைப்புகளை தாண்டி ஸ்கோடா கார்களுக்கே உண்டான பட்டாம்பூச்சி வடிவ கிரில் மற்றும் பொனெட் லைன் ஆகியவை ஓரளவு தெரிகின்றன.

skoda kushaq facelift spotted while testing

தற்போதுள்ள குஷாக் காரில் உள்ள மெல்லிய ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டி.ஆர்.எல்-கள் (LED DRLs) சில மாற்றங்களுடன் புதிய மாடலிலும் இடம்பெறலாம். புதிய குஷாக்கில் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் முகப்பில் சில வேறுபாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதி தான் அதிகமாக மறைப்புகளால் மறைக்கப்பட்டு உள்ளதே தவிர்த்து, காரின் பக்கவாட்டு தோற்றம் தெளிவாகவே தெரிகிறது.

இதன் மூலம் பார்க்கும்போது, கதவு பேனல்கள் தற்போதைய ஸ்கோடா காரில் இருப்பதை போலவே உள்ளன. கருப்பு நிற பக்கவாட்டு தூண்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. புதிய குஷாக் காருக்கு புதிய அலாய் சக்கரங்கள் கொடுக்கப்படலாம். காரின் பின்பகுதியில் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, மெல்லிய எல்இடி டெயில்லேம்ப்கள் மற்றும் ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

skoda kushaq facelift spotted while testing

ஒட்டுமொத்தமாக, புதிய ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் பெரிய வேறுபாடுகள் இல்லாமல், ஆனால் புதிய மாடலை வேறுபடுத்திக் காட்டும் அளவுக்கு மாற்றங்கள் இருக்கும். ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) போன்ற விற்பனையில் போட்டியாக உள்ள கார்களுக்கு இணையாக, ஸ்கோடா தனது குஷாக் காரில் அதிக அம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் சேர்க்க வேண்டியது அவசியம்.

எனவே, புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் அனைத்து சமீபத்திய பாதுகாப்பு மற்றும் இணைப்பு வசதிகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரப்படலாம். இவற்றுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும்.

skoda kushaq facelift spotted while testing

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய காராக குஷாக் விளங்குகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக குஷாக்கின் விற்பனை கணிசமாக குறைந்து வருவதை அடுத்து, அதனை உடனே சரிச்செய்யும் விதமாக ஸ்கோடா நிறுவனம் குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரை களமிறக்குகிறது. தற்போது தீவிரமாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டாலும், புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகத்தை இந்த 2025ஆம் வருடத்திற்குள்ளாக எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 25, 2025, 22:54 [IST]
English summary
New skoda kushaq facelift spotted on mumbai pune expressway ahead of launch
மேலும்... #skoda #skoda kushaq #spy pics #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X