மாருதி வெடவெடத்து போயிருக்கும்! 22 வருஷத்துக்கு பின் மறுபடியும் விற்பனைக்கு வரும் காருக்கு புக்கிங் தொடங்கியது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra). இது கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த டாடா சியரா காரின் புதிய தலைமுறை மாடல் ஆகும்.

விற்பனை நிறுத்தப்பட்டு சுமார் 22 வருடங்கள் கடந்த நிலையில், தற்போதைய சூழலுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு, 'மாடர்ன்' ஆக மாறி வரவுள்ளது டாடா சியரா. புதிய தலைமுறை டாடா சியரா காரின் டீசர் வீடியோக்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அத்துடன் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு புதிய தலைமுறை டாடா சியரா காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பொது பார்வைக்கும் கொண்டு வந்தது.

New Tata Sierra

ஆனால் புதிய தலைமுறை டாடா சியரா காரை பற்றிய பெரும்பாலான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் புதிய தலைமுறை டாடா சியரா காரின் முன் பகுதி டேஷ்போர்டில் 3 திரைகள் வழங்கப்படவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக அந்த இடத்தில், டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என 2 திரைகள் மட்டுமே இருக்கும்.

ஆனால் புதிய தலைமுறை டாடா சியரா காரில், இவற்றுடன் கூடுதலாக முன் பக்க பயணியின் இருக்கைக்கு முன்பாகவும் ஒரு திரை வழங்கப்பட்டிருக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில் இப்படி 3 திரைகள் வசதியை பெறும் முதல் கார் என்ற பெருமையை புதிய தலைமுறை டாடா சியரா பெறவுள்ளது. அத்துடன் டாடா சியரா காரில், பனரோமிக் சன்ரூஃப் வழங்கப்படவிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Old Tata Sierra

இவை எல்லாம் தவிர, லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems), 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ட்யூயல் டோன் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி போன்ற வசதிகளும் (Features), புதிய தலைமுறை டாடா சியரா காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை டாடா சியரா காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களையும் (Engine Options) நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். முதலில் டாடா சியரா காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து இந்த காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு களமிறக்கப்படும்.

இந்திய சந்தையில் டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை வெறும் 10 அல்லது 11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும். புதிய தலைமுறை டாடா சியரா வரும் நவம்பர் 25ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு சில டாடா டீலர்ஷிப்கள், புதிய தலைமுறை சியரா காருக்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 11 ஆயிரம் ரூபாய் முன்பணத்தை கட்டி, புதிய தலைமுறை டாடா சியரா காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) ஆகிய கார்களுக்கு எல்லாம், புதிய தலைமுறை டாடா சியரா காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, November 17, 2025, 17:53 [IST]
English summary
New tata sierra unofficial bookings open ahead of launch on november 25 all details here
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+