டாடா சியராவுக்கு போட்டியா பழம் தின்னு கொட்டை போட்ட பல கார்கள்! அவற்றை விட இதில் என்ன சிறப்பு?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது 2025 சியரா (Sierra) காரை ரூ.11.49 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16க்கு பிறகே துவங்கப்பட உள்ளது என்றாலும், காரின் வெளிப்புற, உட்புறத் தோற்றம், முழுமையான என்ஜின் விவரங்கள் மற்றும் முக்கிய அம்சங்களை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய சியரா சுமார் 4.3 மீட்டர் நீளம் கொண்டது. டாடா கார்கள் வரிசையில் கர்வ் (Curvv) காருக்கு மேல் இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹோண்டா எலிவேட் (Honda Elevate), ஃபோக்ஸ்வாகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), எம்ஜி அஸ்டர் (MG Astor) மற்றும் சிட்ரோயன் ஏர்கிராஸ் (Citroen Aircross) போன்ற கார்களுக்கு சியரா நேரடி போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சியரா தனது போட்டியாளர்களுடன் எந்த அளவிற்கு வேறுப்படுகிறது என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

new tata sierra vs its rivals

பரிமாண அளவுகள்: 1,715 மிமீ உயரத்தில், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் சியரா மிக உயரமான மாடலாக உள்ளது. அதேபோல், இதன் 2,730 மிமீ வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) மற்ற போட்டி கார்களை விட நீண்டதாக உள்ளது.

Dimensions Tata Sierra Hyundai Creta Kia Seltos Maruti Victoris Toyota Hyryder Maruti Grand Vitara Honda Elevate Skoda Kushaq VW Taigun Citroen Aircross MG Astor
Length (mm) 4340 4330 4365 4360 4365 4345 4312 4225 4221 4324 4323
Width (mm) 1841 1790 1800 1795 1795 1795 1790 1760 1760 1796 1809
Height (mm) 1715 1635 1645 1655 1645 1645 1650 1612 1612 1665 1650
Wheelbase (mm) 2730 2610 2610 2600 2600 2600 2650 2651 2651 2671 2585
Ground clearance (mm) 205 190 190 210 210 210 220 188 188 200 205
Boot space (litres) 622 433 433 446 373 373 458 385 385 444 488
Wheel size (inch) 17-19 17 18 - - - - - - - -

622 லிட்டர் (அறிவிக்கப்பட்டது) கொள்ளளவில் பூட் ஸ்பேஸ், இந்தப் பிரிவில் மிக பெரிய பூட் ஸ்பேஸ் கொண்ட காராக சியராவை முன்னிலைப்படுத்துகிறது. இது, பெரும்பாலான போட்டி கார்களை விட சியராவுக்கு ஒரு பெரிய நன்மையை வழங்குகிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 19 அங்குல சக்கரங்கள் சியராவுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. ஒட்டுமொத்தத்தில், சியரா மிட்-சைஸ் எஸ்யூவி கார்களிலேயே மிகப்பெரிய கார் ஆகும்.

new tata sierra vs its rivals

பெட்ரோல் என்ஜின்: சியராவின் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வந்துள்ளது. இது விட்டாராவுக்கு இணையான செயல்திறனை சியரா காரில் வழங்கக்கூடியதாக உள்ளது. நகரப் பயன்பாடு மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு இந்த நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் ஏற்றது. மற்ற போட்டி கார்களின் ஆரம்ப நிலை பெட்ரோல் என்ஜின்களுடன் ஒப்பிடும்போது, இதன் சீரான பவர் டெலிவரி மற்றும் மென்மையான செயல்பாடு இதன் முக்கிய பலங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Specification Tata Sierra Honda Elevate Hyundai Creta Maruti Victoris Skoda Kushaq
Type 4 cyls NA 4 cyls NA 4 cyls NA 4 cyls NA 3 cyls Turbo
Displacement 1498cc 1498cc 1497cc 1462cc 999cc
Power 106hp 121hp 115hp 103hp 115hp
Torque 145Nm 145Nm 143.8Nm 139Nm 178Nm
Manual transmission 6-speed MT 6-speed MT 6-speed MT 5-speed MT 6-speed MT
Automatic transmission 7-speed DCT 7-speed CVT 6-speed CVT 6-speed torque converter 6-speed torque converter

டர்போ-பெட்ரோல் என்ஜின்: 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் புதிய சியரா காரில் கிடைக்கும். இது க்ரெட்டா, செல்டோஸ், டைகுன் மற்றும் குஷாக் போன்ற மற்ற டர்போ கார்களுடன் சியராவை ஒரே பிரிவில் நிலைநிறுத்துகிறது. இதன் மென்மையான ஐசின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பரபரப்பான நகரப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைப் பயணங்களின்போது மிகவும் உதவியாக இருக்கும்.

Specification Tata Sierra Hyundai Creta Citroen Aircross Kia Seltos Skoda Kushaq
Type 4 cyls turbo 4 cyls turbo 3 cyls turbo 4 cyls turbo 4 cyls turbo
Displacement 1498cc 1482cc 1199cc 1482cc 1498cc
Power 160hp 160hp 110hp 160hp 150hp
Torque 255Nm 253Nm 190Nm 253Nm 250Nm
Manual transmission NA 6-speed MT 6-speed MT NA NA
Automatic transmission 6-speed torque converter 7-speed DCT 6-speed torque converter 7-speed DCT 7-speed DCT
new tata sierra vs its rivals

டீசல் என்ஜின்: சியராவின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த பிரிவில் பெரும்பாலான போட்டி கார்கள் டீசல் ஆப்ஷன்களை நீக்கியுள்ளதால், இது சியராவுக்கு ஒரு சிறப்பான அம்சமாகும். அடிக்கடி நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இதன் எரிபொருள் திறன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சியராவின் டீசல்-ஆட்டோமேட்டிக் காம்போ மற்ற போட்டி கார்களை விட ஒரு முக்கிய விற்பனைப் புள்ளியாகும்.

Specification Tata Sierra Hyundai Creta Kia Seltos
Type 4 cyls 4 cyls 4 cyls
Displacement 1497cc 1493cc 1493cc
Power 118hp 116hp 116hp
Torque 260/280Nm 250Nm 250Nm
Manual transmission 6-speed MT 6-speed MT 6-speed MT
Automatic transmission 6-speed torque converter 6-speed torque converter 6-speed torque converter

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காகிதத்தில், டாடா சியரா ஒரு உறுதியான பேக்கேஜை வழங்குகிறது. இது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது. மேலும், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் மற்ற பிரபலமான கார்களுடன் போட்டியிடும் அளவுக்கு பெரியதாகவும், சரியான கலவையிலும் உள்ளது. இந்த அம்சங்கள் உடன் டாடா சியரா சிறப்பாக செயல்பட்டால், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் இது ஒரு முக்கியமான போட்டியாளராக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 26, 2025, 16:05 [IST]
English summary
New tata sierra vs its rivals hyundai creata kia seltos and maruti suzuki grand vitara
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X