மைலேஜை வாரி வழங்கும் 9 சீட்டர் வேனை களமிறக்கிய டாடா! விலை இவ்ளோதானா! வாங்கி வாடகைக்கு விட்டா லாபம் கொட்டும்!
இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கார்கள் மட்டுமல்லாது, வேன்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற வர்த்தக வாகனங்களையும் விற்பனை செய்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் உலகின் முன்னணி வர்த்தக வாகன நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் திகழ்கிறது.
இந்திய சந்தையில் வர்த்தக வாகனங்களின் செக்மெண்ட்டில், தனது ஆதிக்கத்தை மேலும் வலிமையாக்கி கொள்ளும் விதமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புத்தம் புதிய வாகனம் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது புதிய டாடா விங்கர் ப்ளஸ் (New Tata Winger Plus) ஆகும்.

புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனில் 9 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான ஆர்ம்ரெஸ்ட்கள் உடன் கேப்டன் இருக்கைகளை புதிய டாடா விங்கர் ப்ளஸ் கொண்டுள்ளது. இந்த கேப்டன் இருக்கைகளை சாய்த்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
அத்துடன் தனிப்பட்ட யூஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட்கள் மற்றும் ஏசி வெண்ட்கள் ஆகிய அம்சங்களும், புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனில் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனில், பயணிகள் தங்கள் கால்களை சௌகரியமாக வைத்து கொள்வதற்கு ஏதுவாக தாராளமான இடவசதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கேபினும் அகலமாக இருக்கிறது.

மேலும் தாராளமான லக்கேஜ் கம்பார்ட்மெண்ட்டும், புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனில் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து சௌகரியமான தொலை தூர பயணங்களுக்கு ஏற்ற வாகனமாக டாடா விங்கர் ப்ளஸ் வேனை மாற்றுகின்றன. டூர் செல்வது மட்டுமல்லாது, அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைத்து சென்று வருவது போன்ற பணிகளுக்கும் புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனை பயன்படுத்தலாம்.
செயல்திறனை பொறுத்தவரையில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை, புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேன் கொண்டுள்ளது. அதிகபட்சமாக 100 ஹெச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த டீசல் இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதுடன், அதிக மைலேஜ் கொடுக்க கூடியதாகவும் இருப்பதால், புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனை இயக்குவதற்கு குறைவான செலவுதான் ஆகும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வலிமையான பாதுகாப்பு மற்றும் சிறப்பான ரைடு குவாலிட்டி ஆகிய அம்சங்களை எல்லாம் கொண்டுள்ள புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேன், மோனோகாக் சேஸிஸ் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கார் போன்ற கையாளுமை பண்புகளை கொண்டுள்ளதால், புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேன், டிரைவர் சோர்வடைவதை தடுக்கும் என டாடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நகர பகுதிகள் அல்லது நெடுஞ்சாலைகள் என எதுவானாலும், புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனை இயக்குவது எளிது எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 60 லிட்டர்கள் ஆகும். எனவே எரிபொருள் நிரப்புவதற்காக அடிக்கடி நின்று கொண்டிருக்க தேவையில்லை.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாக்ஸி, வேன் போன்ற வர்த்தக வாகனங்களை வைத்து தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய டாடா விங்கர் ப்ளஸ் நல்ல ஆப்ஷன். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளபடி இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் குறைவான செலவு மட்டுமே ஆகும் என்பதால், இதன் உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். நிகழ் நேரத்தில் ட்ராக் செய்து கொள்வது போன்ற வசதிகள் எல்லாம் இருப்பது, புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேனின் விலை 20.60 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். வாடிக்கையாளர்கள் வழங்கும் இந்த பணத்திற்கு மதிப்பு வாய்ந்த இந்த தயாரிப்பாக புதிய டாடா விங்கர் ப்ளஸ் வேன் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








