30 நாளில் 22,500 பேர் இந்த ஒரே காரை வாங்கிட்டாங்க! அப்படி என்ன இருக்குது?

டாடா நெக்ஸான் பயணிகள் வாகன பிரிவு வரலாறு காணாவ னிற்பவனையை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 60,907 வாகனங்களை விற்பனவை செய்துள்ள நிலையில் அதிகபட்சமாக டாடா நெக்ஸான் கார் தான் விற்பனையாகியுள்ளது. இந்த காரை மக்கள் விரும்பி வாங்க என்ன காரணம்? விரிவாக காணலாம் வாருங்கள்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்தது. இதன்படி வாகனங்களின் விலை கணிசமாக குறைந்தது. இந்நிலையில் விற்பனவை வெகுவாக அதிகரித்தது. கடைசி 8 நாளில் ஏகப்பட்ட கார்கள் விற்பனையாகின.
இந்நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மாதம் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.

Nexon Sales Sep 2025

இந்நிறுவனம் மொத்தம் 60,907 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 59,667 கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் நடந்த விற்பனவையை ஒப்பிடும் போது 47 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது ஒட்டு மொத்த பயணிகள் வாகன செக்மெண்டிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் 9191 வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. இது 96 சதவீத வளர்ச்சியாகும்.

சிஎன்ஜி வாகனங்கள் மட்டும் 17800 வாகனங்கள் விற்பவனையாகியுள்ளன. ஒவ்வொரு காரின் விற்பனையாக பார்க்கும் போது டாடா நெக்ஸான் கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இதுவரை டாடா பயணிகள் வாகனங்களிலேயே ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக விற்பனையை பெற்ற கார் இது தான் என்ற சாதனையை இந்த கார் படைத்துள்ளது. ஒரே மாதத்தில் 22,500 கார்கள் விற்பனையாகியுள்ளன.

Nexon Sales Sep 2025

டாடா நெக்ஸான் கார் கடந்தமாதம் நடந்த ஜிஎஸ்டிவரி குறைப்பில் இந்த காரின் விலை ரூ1.55 லட்சம் வரை குறைந்தது. இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷன்களும் இதில் உள்ளன. இதை தொடர்ந்து டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்கள் இணைந்து அடுத்த இடத்தில் உ்ளன. அட்வெஞ்சர் எக்ஸ் வேரியன்ட் சிறப்பான விற்பனையை பெற்றது மற்றொரு சிறப்பான விஷயம் ஆகும்.

மைக்ரோ எஸ்யூவி செக்மெண்டில் விற்பனையாகும் பஞ்ச் காரும் நல்ல விற்பனையை பெற்றுள்ளது.இந்த நிதியாண்டின் 2ம் காலாண்டில் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தமாக 1,44,397 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் 2ம் காலாண்டில் 1,30,753 கார்கள் தான் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை வெகுவாக அதிகரித்துள்ளது. 10 சதவீதம் வரை விற்பனை அதிகமாகியுள்ளது.

Nexon Sales Sep 2025

இதில் உள்நாட்டு விற்பவனை மட்டும் 1,40,189 வாகனங்கள் உள்ளன. ஏற்றுமதியில் 4208 வாகனங்கள் உள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 823 கார்கள் ஏற்றுமதியாகியிருந்தது. அதை ஒப்பிடும் போது 5 மடங்கு ஏற்றுமதி அதிமாகியுள்ளது. கடந்த 2ம் காலாண்டில் மொத்தம் 24855 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி 59 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. ஒட்ட மொத்த வாகன விற்பனையில் இவி வாகனங்கள் மட்டும் 17 சதவீதம் விற்பனையாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு பலர் வாகனங்களை வாங்கும் முடிவை எடுத்துள்ளனர். இதனால் வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் அதிக நபர்கள் வாகனங்களை வாங்கியுள்ளனர். ஒரே காரை ஒரே மாதத்தில் 22 ஆயிரம் பேர் வாங்கியுள்ளது மிகப்பெரிய சாதனை தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 2, 2025, 16:30 [IST]
English summary
Nexon sales sep 2025 record 22500 units highest monthly tata
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X