மீண்டும் வருகிறதா டாடா சுமோ? வெறித்தனமான லுக் ஊரே திரும்பி பார்க்கபோகுது!
டாடா நிறுவனம் சியாரா காரை தற்போது தான் மீண்தும் கொண்டு வந்தது. இந்த கார் அந்நிறுவனத்தின் பழைய கார் தற்போது அதை மீண்டும் கொண்டு வந்துள்ளது. பழைய காரை டாடா நிறுவனம் மீண்டும் கொண்டு வந்துள்ள நிலையில் அடுத்ததாக எந்த காரை கொண்டு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு டாடா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து சமூகவலைத்தளங்களில் நடந்த பெரும் விவாதங்களில் மக்கள் மத்தில் டாடா சுமோ காரை தான் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்பு இருப்பதாக கூறப்பட்டது. டாடா நிறுவனத்திடம் தற்போது இந்த செக்மெண்டில் எந்த காரும் இல்லை. இந்நிலையில் டாடா நிறுவனத்தின் சுமோ கார் மீண்டும் வந்தால் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த பலர் அதை வடிவமைத்து வெளியிட்டு வருகின்றனர்.

இப்படியாக சமீபத்தில் வெளியான சுமோ காரின் ரென்டர் புகைப்படம் வைரலாக பவரி வருகிறுது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்த சுமோ கார் மீண்டும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் பாக்ஸியான வடிவமைப்பு ஒரிஜினல் சுமோ கார் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரை வடிவமைக்க செயற்கை நுண்ணறிவு தளத்தில் பழைய சுமோ புகைப்படத்தை அப்லோடு செய்து அதை நவீன எஸ்யூவி கார் போல மாற்றி வடிவமைத்துள்னர்.
தற்போது உள்ள டாடா கார்களில் இருக்கும் லெவ்கம்பார், முன்பக்க கிரில் வடிவமைப்பு இலுமினேட் செய்யக்கூடிய டாடா லோகோ, ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப், ஆகிய இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள கருப்பு பம்பர் ரக்கட் லுக்கை வழங்குகிறது. இது போக சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிரீட் பிளேட், சிவப்பு நிற டோ ஹூக் ஆகிய அமசங்கள் ஈர்க்கிறது. அலாய் வீல் டிசைன் புதிதாக உள்ளது.
பின்பக்க வெர்டிகலாக வைக்கப்பட்ட டெயில் கேட், சியாரா காரில் உள்ளதை போலவே உள்ளது. பின்பக்கமும் எல்இடி லைட் பார் வழங்கப்பட்டுள்ளுது. நடுவே சுமோ என எழுத்து உள்ளது. பின்பக்கம் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 4 ஸ்போக் கொண்ட ஸ்டியரிங் வீல், ரோட்டரி கியர் நாப், பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சீட் வென்டிலேஷன், உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. இந்த வடிவமைப்பை Dipayan Ray என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
தற்போது உள்ள டாடா கார்களில் இருக்கும் லெவ்கம்பார், முன்பக்க கிரில் வடிவமைப்பு இலுமினேட் செய்யக்கூடிய டாடா லோகோ, ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப், ஆகிய இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள கருப்பு பம்பர் ரக்கட் லுக்கை வழங்குகிறது. இது போக சில்வர் ஃபாக்ஸ் ஸ்கிரீட் பிளேட், சிவப்பு நிற டோ ஹூக் ஆகிய அமசங்கள் ஈர்க்கிறது. அலாய் வீல் டிசைன் புதிதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் இதுவரை சுமோ காரை வெளியிடப்போவதாக அதிகரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் சுமோ காருக்கு இருக்கும் எதிர்பார்ப்பை பார்த்தால் டாடா நிறுவனம் இந்த காரை மீண்டும் கொண்டு வந்தால் நிச்சயம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








