தமிழ்நாட்டில் தென்பட்ட மர்ம கார்! இந்தியாவே இதுக்குதான் தவம் கெடக்குது! இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
இந்திய சந்தையில் நிஸான் (Nissan) நிறுவனம் தற்போது தத்தளித்து கொண்டுள்ளது. நிஸான் நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 2 கார்களை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.
இதில், நிஸான் மேக்னைட் மட்டும்தான் ஓரளவிற்கு விற்பனையாகி வருகிறது. மறுபக்கம் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் ஒரு தோல்வியடைந்த காராக கருதப்படுகிறது. ஏனெனில் கடந்த 4 மாதங்களில், அதாவது ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை, ஒரு நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார் கூட விற்பனையாகவில்லை.

எனவே அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் வகையிலான பல்வேறு கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி கார் (7 Seater MPV Car) ஒன்றை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இது இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. எனவே ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான் (Engine), நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் (Gear Box Options) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி காரில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தவிர, டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது நடக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி காரின் வசதிகளை (Features) பொறுத்தவரையில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், மழை வந்தால் தானாக இயங்க கூடிய ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படலாம். மேலும் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம்.
இந்த சூழலில், நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி கார், இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. kodaivik என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வைரல் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வைரல் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அனேகமாக நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி கார் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது, கேமரா கண்களில் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் (Chennai) உள்ள தொழிற்சாலையில்தான் இந்த கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இதன் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








