பைக்கை விட குறைவான விலையில் 7 சீட்டர் கார்! சொன்ன மாதிரியே நாளைக்கு அறிமுகம் பண்றாங்க! மாருதி கதை முடிஞ்சுது!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காரின் அடிப்படையில் புத்தம் புதிய 7 சீட்டர் எம்பிவி ரக கார் ஒன்றை நிஸான் (Nissan) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார், நாளை (டிசம்பர் 18) பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய 7 சீட்டர் கார் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி காரிலும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 71 பிஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளை (Safety Features) பொறுத்தவரையில், ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி காரிலும், ஸ்டாண்டர்டாக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், மழை வந்தால் தானாக இயங்க கூடிய வைப்பர்கள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் மற்றும் ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவை எல்லாம் தவிர, ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிமோட் கீலெஸ் எண்ட்ரி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளையும், நிஸான் நிறுவனத்தின் 7 சீட்டர் எம்பிவி கார் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் டிசைனில் (Design) நிறைய மாற்றங்களை நம்மால் உறுதியாக எதிர்பார்க்க முடியும். அதாவது ரெனால்ட் ட்ரைபர் காரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி கார், ஏராளமான டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும். ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரும், மிகவும் விலை குறைவானதாகவே இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அனேகமாக நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரின் ஆரம்ப விலை வெறும் 5.75 அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு சில பிரீமியம் பைக்குகளை விட குறைவு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாருதி சுஸுகி எர்டிகா போன்ற கார்களுக்கு எல்லாம் இது விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








