டூவீலர் விலையில் களமிறங்கும் 7 சீட்டர் கார்! மாருதிக்கு இப்பவே வயித்துல புளியை கரைக்க ஆரம்பிச்சிருக்கும்!

இந்தியாவில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. எம்பிவி ரக கார்களில் நிறைய பேர் தாராளமாக அமர்ந்து பயணம் செய்ய முடியும். எனவே அதிக உறுப்பினர்களை கொண்ட குடும்பங்களின் முதன்மையான ஆப்ஷன்களில் ஒன்றாக எம்பிவி ரக கார்கள் உள்ளன.

நீங்கள் ஒரு புதிய எம்பிவி ரக காரை வாங்குவது குறித்து யோசனை செய்து கொண்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் புத்தம் புதிய எம்பிவி ரக கார் ஒன்று விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது குறித்த தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.

Renault Triber Top View

ஃபிரான்ஸை (France) சேர்ந்த ரெனால்ட் (Renault) மற்றும் ஜப்பானை (Japan) சேர்ந்த நிஸான் (Nissan) ஆகிய 2 நிறுவனங்களும் மிக நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த கூட்டணியின் மூலம்தான் தற்போது நாம் பேசி கொண்டுள்ள புதிய எம்பிவி ரக கார் விற்பனைக்கு வரவுள்ளது.

அதாவது ரெனால்ட் நிறுவனம் ட்ரைபர் (Renault Triber) என்ற எம்பிவி காரை இந்தியாவில் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் அடிப்படையில்தான், நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி ரக கார் உருவாக்கப்பட்டு கொண்டுள்ளது. எனினும் நிஸான் நிறுவனத்தின் எம்பிவி காரின் டிசைன், ரெனால்ட் ட்ரைபர் உடன் ஒப்பிடும்போது, முற்றிலும் வேறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Renault Triber

ஆனால் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்படும் அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி ரக காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம்.

அதே சமயம் இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வசதிகளை பொறுத்தவரையில், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகிய அம்சங்களை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்.

அத்துடன் கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளும் நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி ரக காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு வசதிகளை பொறுத்தவரையில், அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளும் நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி ரக காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய கார், 7 சீட்டர் ஆப்ஷனில் களமிறக்கப்படவுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய கார் அனேகமாக வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவில் விற்பனையாகும் சில பிரீமியம் பைக்குகளை விட இந்த காரின் விலை குறைவாக இருக்கும். எனவே மிகவும் குறைவான விலையில் அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான ஒரு எம்பிவி காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, இந்த நிஸான் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஏற்றதாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) போன்ற எம்பிவி ரக கார்களுக்கு, நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி ரக காரின் வருகை, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரெனால்ட் ட்ரைபருக்கும் கூட இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 11, 2025, 14:20 [IST]
English summary
Nissan affordable mpv india launch soon expected price features and more
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+