ஜப்பான்காரன் எறங்கீட்டான்! மாருதி ஈரக்குலையை நடுங்க வைத்த புதிய 7 சீட்டர் கார்! விலை இவ்ளோதானா!
ஜப்பான் (Japan) நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.
இந்த வரிசையில் மூன்றாவதாக ஒரு புதிய காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய நிஸான் நிறுவனம் தயாராகி வருகிறது. அது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார் ஆகும். இந்த காரின் பெயர் என்ன? என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காருக்கு நிஸான் க்ராவைட் (Nissan Gravite) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ரெனால்ட் ட்ரைபர் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே CMF-A+ பிளாட்பார்ம் அடிப்படையில்தான் நிஸான் க்ராவைட் காரும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்தான், நிஸான் க்ராவைட் காரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் அதிகபட்சமாக 76 ஹெச்பி பவர் மற்றும் 95 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் க்ராவைட் காரானது, ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக இருக்கும்.

இருப்பினும் வசதிகளில் (Features) எந்த குறையும் இருக்காது என நாம் எதிர்பார்க்கலாம். 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்ற வசதிகள் எல்லாம் நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ரியர் பார்க்கிங் கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும் (Safety Features), நிஸான் க்ராவைட் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிஸான் க்ராவைட் எம்பிவி கார், அடுத்த மாதம் (ஜனவரி) அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அப்போது விலையை தவிர, நிஸான் க்ராவைட் காரை பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும்.
இதன்பின் வரும் மார்ச் மாதத்தில், நிஸான் க்ராவைட் காரின் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்படும். அனேகமாக நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.75 அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் க்ராவைட் காரின் வருகை, இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு, விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் ரெனால்ட் ட்ரைபர் காருக்கும் கூட, இது நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








