அடிமாட்டு விலையில் 7 சீட்டர் கார்! இந்தியாவை மிரள விடும் ஜப்பான் கம்பெனி! மாருதி ஷோரூம்கள் காத்து வாங்க போகுது
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று நிஸான் க்ராவைட் (Nissan Gravite). இது மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ள 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரக கார் ஆகும். இதன் காரணமாகவே நிஸான் க்ராவைட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி கொண்டுள்ளது.
நிஸான் க்ராவைட் கார், வரும் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ளது. அதை தொடர்ந்து மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நிஸான் க்ராவைட் காரின் சோதனை ஓட்டம், தமிழக சாலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் (Chennai) உள்ள ரெனால்ட் நிஸான் ஆட்டோமேட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Renault Nissan Automotive India Private Limited) தொழிற்சாலையில்தான், நிஸான் க்ராவைட் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிஸான் ஆகிய 2 நிறுவனங்களும் நீண்ட காலமாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
இந்திய சந்தையில் தற்போது மிகவும் பிரபலமாக இருந்து வரும் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்றான ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில்தான், நிஸான் க்ராவைட் உருவாக்கப்பட்டு வருகிறது. நிஸான் க்ராவைட் காரில், 1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் க்ராவைட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகள் பாதுகாப்பிற்காக வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோகிராம், ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், முன் மற்றும் பின் பகுதியில் பார்க்கிங் சென்சார்கள், ஃபாலோ மீ ஹோம் ஹெட்லைட்கள் போன்ற பாதுகாப்பு வசதிகளையும் (Safety Features), நிஸான் க்ராவைட் கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இவை எல்லாம் தவிர, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் வசதியுடன் 20.32 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகளையும், நிஸான் க்ராவைட் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் க்ராவைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 5.75 லட்ச ரூபாய் அல்லது 6 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டும்தான் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga), நிஸான் க்ராவைட் விற்பனையில் சவால் அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 8.80 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே நிஸான் க்ராவைட் கார், இதற்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








