இந்திய தயாரிப்பு வேணும்னு அடம்பிடிச்சு வாங்கும் வெளிநாட்டு மக்கள்! 12 லட்சம் கார் வித்துடுச்சு!

நிஸான் நிறுவனம் இந்தியாவில் தற்போது ஒரே ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. நிஸான் மேக்னைட் இந்த கார் இந்திய மார்கெட்டிலும் ஹிட்டாகி சிறப்பாக விற்பனையை பெற்று வரும் நிலையில் இந்நிறுவனம் தற்போது ஏற்றுமதியில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்திய மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மக்களும் இந்த காரை தேடி தேடி வாங்கிவருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேக்னைட் என்ற காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.இந்தியாவில் தயாராகும் இந்த கார் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்படாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளிநாட்டு மக்களும் இந்த தயாரிப்பை விரும்பி வாங்கி வருகின்றனர். வெளிநாட்டு ஏற்றுமதியில் இந்நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது.

Nissan India Export

இந்நிறுவனம் மொத்தம் 12 லட்சம் வாகனங்கள் என்ற ஏற்றுமதி சாதனையை அந்நிறுவனம் செய்துள்ளது. இந்த ஏற்றுமதி எல்லாம் நாம் சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகம் மூலமாக தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் மேக்னைட் காரை மட்டுமே தயாரித்து விற்பனை செய்தாலும் ஏற்றுமதிக்காக மற்ற கார்களையும் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் மேக்னைட் பி, சன்னி செடான், கிக்ஸ் எஸ்யூவி, மைக்ரா ஹேட்ச்பேக் ஆகிய கார்களை இந்நிறுவனம் ஏற்றுமதிக்காக தயாரிக்கிறது. இந்த கார்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த கார்களில் வலது மற்றும் இடது பக்க டிரைவ் ஆப்ஷன்கள் உள்ளது. இந்நிறுவனம் தற்பேஆது 65 நாடுகளுக்கு தனது கார்களை ஏற்றுமதி செய்கிறது. இதன் படி ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தின் அமெரிக்கால, தென் கிழக்கு ஆசிய பிராந்தியங்கள் ஆகிய பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Nissan India Export

இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையில் மேக்னைட் காரையே ஏற்றுமதி செய்கிறது.இந்த கார் குளோபல் என்கேப் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. மொத்தம் 55 விதமான அம்சங்களும் வடவிமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் டேக்டான் என்ற பெயரில் புதிய எஸ்யூவி காரை காளம் இறக்க திட்டமிட்டுள்ளது. இது ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது.

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின் படி இந்த இரண்டு பிராண்ட் கார்களும் ஒரே ஆலையில் தான் தயாரிக்கப்படுகிறது. இந்த இரு நிறுவனங்கள் தங்கள் தொழிற்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இதனால் ரொனல்ட் பிராண்டில் வரும் கார் நிஸான் பிராண்டிலும் நிஸான் பிராண்டில் வரும் கார் ரொனால்ட் பிராண்டிலும் தயாரிக்கப்படும்.

தற்போது ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் என்ற காரைதயாரித்து விற்பனைக்காக கொண்டு வரவுள்ளது. வரும் ஜனவரி 26ம் தேதி இந்த கார் விற்பனைக்காக அறிமுகமாகவுள்ளது. இதே காரை சற்று மாற்றியமைத்து டேக்டான் என்ற பெயரில் இந்தியாவில் நிஸான் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் மக்கள் பலர் இந்த இரு கார்களையும் விரும்பி வாங்க வாய்ப்புள்ளது

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது வாகன தயாரிப்பு சிறப்பாக இருப்பதால் இந்திய தயாரிப்புகள் மீது மக்கள் அதிக மோகம் கொள்கின்றனர். இந்நிலையில் எதிர்காலத்தில் இந்த கார்கள் எல்லாம் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, October 31, 2025, 7:59 [IST]
English summary
Nissan india export hits 1 2 million units milestone
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+