காருனா இப்படி விற்பனையாகணும்.. 7 ஆண்டுகள்ல இல்லாத விற்பனை.. உள்நாடு-வெளிநாடு ரெண்டுலையும் பட்டைய கிளப்புது!!

கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்களின் நிறுவனத்தின் கார்கள் மிக அதிக எண்ணிக்கையில் இந்த நிதியாண்டில் விற்பனையாகி இருப்பதாக ஓர் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan)-னே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் கார் பிராண்டு ஆகும். கடைசியாக கடந்த 2017-18 நிதியாண்டிலேயே இந்த நிறுவனத்தின் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்கு அடுத்தபடியாக நிதியாண்டு 2024-25-லேயே அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

சுமார் 99 ஆயிரம் யூனிட்டுகள் வரையே நிஸான் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இதில், 28 ஆயிரம் யூனிட்டுகள் உள் நாட்டில் விற்பனையாகியவை ஆகும். 71 ஆயிரம் யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். ஆமாங்க, இந்தியாவைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளிலேயே நிஸான் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன.

Nissan india hits record sales in fy 2024-25

இதன் வாயிலாக உலக நாடுகளிலும் நிஸான் கார்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. நிஸான் மேக்னைட் (Magnite) கார் மாடலே அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்தியாவைப் போலவே உலகின் 65 நாடுகளில் நிஸான் மேக்னைட் கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பதும் இங்கே கவனிக்கத்தகுந்தது.

குறிப்பாக, உலக சந்தைக்கு ஏற்ப வலது - இடது பக்க கை டிரைவிங் வசதியுடன் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுமட்டும் அல்ல நிஸான் நிறுவனத்தின் கார்கள் நம்முடைய தமிழகத்தில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு தகவலாக அமைந்திருக்கின்றது. சென்னை ஒரகடத்திலேயே நிஸான் கார் உற்பத்தி ஆலை அமைந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Nissan magnite rear view

கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை எஸ்யூவி (SUV) ரக கார் மாடலாகவும் மேக்னைட் உள்ளது. இந்தியாவில் இந்த கார் ரூ. 6.14 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த காரில் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களை நிஸான் வழங்கிக் கொண்டிருக்கின்றது. 1.0 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆகியவையே அவை ஆகும். இரண்டுமே அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டவை ஆகும்.

Nissan magnite front view

இதேபோல், சிறப்பம்சங்களைத் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் மிக சிறப்பான கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் நிஸான் மேக்னைட் கார் மாடலில் 16அங்குல அலாய் வீல், சாஃப்ட்டான மெட்டீரியலால் அலங்கரிக்கப்பட்ட காரின் உட்பக்கம், தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றை சுத்தமாக்கும் கருவி என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் நிஸான் நிறுவனம் வழங்கியிருக்கின்றது.

கடந்த ஏழு நிதியாண்டின் நிஸான் நிறுவன கார் விற்பனை விபரம்: நிதியாண்டு 2020இல் 51,275 யூனிட்டுகளும், நிதியாண்டு 2021இல் 76,666 யூனிட்டுகளும், நிதியாண்டு 2022இல் 94,219 யூனிட்டுகளும், நிதியாண்டு 2023இல் 73,124 யூனிட்டுகளும், நிதியாண்டு 2024இல் 99,000 யூனிட்டுகளும் விற்பனையாகி இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் தயாரிக்கப்படும் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் காருக்கு உலக நாடுகளிலும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது இப்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, March 31, 2025, 23:22 [IST]
English summary
Nissan india reports record sales performance with over 99 000 units in fy2024 25
மேலும்... #nissan #nissan magnite #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X