களத்தில் ஜப்பான் இன்ஜினியர்கள்! வெறும் 6 லட்சத்துக்கு 7 பேர் போற காரா! மாருதி மார்க்கெட் ஆட்டம் காண போகுது!

ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் நிறுவனம் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும். ஆனால் அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய சந்தையில் நிஸான் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 4 ஆக உயரவுள்ளது. ஆம், இந்திய சந்தையில் 2 புத்தம் புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு நிஸான் நிறுவனம் தயாராகி வருகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நிஸான் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள 2 புத்தம் புதிய கார்களின் டீசர் புகைப்படத்தையும் (Teaser Image) நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் புகைப்படம் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை அதிகரிக்க செய்துள்ளது.

Nissan India To Launch 2 New Cars

நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2 கார்களில் ஒன்று எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில்தான் இந்த புதிய எம்பிவி கார் உருவாக்கப்படவுள்ளது.

ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ரெனால்ட் நிறுவனம் தற்போது ட்ரைபர் காருடைய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதன்பின் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை (New Generation) மாடலையும் ரெனால்ட் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Renault Triber

ரெனால்ட் ட்ரைபர் காரின் புதிய தலைமுறை மாடலின் அடிப்படையில்தான் நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் நிறுவனத்தின் இந்த புதிய எம்பிவி கார் 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்டதாக இருக்கும். அதாவது 2+3+2 என்ற வகையில் இந்த காரில் 7 பேர் பயணம் செய்ய முடியும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 6.10 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். கிட்டத்தட்ட இதே அளவிலான விலையில்தான் நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே குறைவான விலையில் புதிய எம்பிவி ரக காரை வாங்கலாம் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும். நிஸான் நிறுவனத்தின் 2 புதிய கார்களில் இதுதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அனேகமாக 2026ம் ஆண்டின் மத்தியில், அதாவது கிட்டத்தட்ட இன்னும் ஒரு வருடத்தில் இந்த கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து காம்பேக்ட் எஸ்யூவி (Compact SUV) ரக கார் ஒன்றை நிஸான் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார், ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு எல்லாம் போட்டியாக இருக்கும். இந்த கார் வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நிஸான் விற்பனை செய்யும் கார்களின் எண்ணிக்கை 4 ஆக உயரவிருப்பது நல்ல விஷயம். இது நிஸான் நிறுவனத்தின் 'கம்பேக்' ஆக இருக்கலாம். ஏனெனில் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை சொல்லி கொள்ளும்படியாக இல்லை.

இந்த 2 கார்களின் வருகைக்கு பின்னர், நிஸான் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை நன்றாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காருக்கு போட்டியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 26, 2025, 20:20 [IST]
English summary
Nissan india to launch 2 new cars affordable 7 seat mpv suv teaser image
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+