இந்தியாவில் மொத்தமாகவே வெறும் 2 கார்களை விற்கும் நிசான்! கஸ்டமர்ஸை ஈர்க்க இதை விட்டால் வேற வழி தெரியல!
நிசான் (Nissan), ஜப்பானில் இருந்து இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று. நீண்ட வருடங்களாக செயல்பட்டாலும், இந்தியாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க இப்போது வரையிலும் நிசான் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறது. இந்திய சந்தையில் தற்போதைக்கு இரண்டே இரண்டு நிசான் கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா?
மேக்னைட் (Magnite), எக்ஸ்-டிரைல் (X-Trail) என்பன அந்த இரு நிசான் கார்கள் ஆகும். இதில், எக்ஸ்-டிரைல் ஆனது பணக்காரர்களை டார்க்கெட் செய்து பல லட்சங்களில் விலையை கொண்டுள்ளதால், இந்தியாவில் நிசானின் ஒரே பிரதானமான காராக மேக்னைட் விளங்குகிறது. 2020இல் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காரில் அதன்பின் சிலமுறை நிசான் நிறுவனம் அப்கிரேட்களை கொண்டுவந்துள்ளது.

அதேநேரம், நிசான் மேக்னைட் காரில் அவ்வப்போது ஸ்பெஷல் எடிசன்களை (Special Editions) அறிமுகம் செய்வதையும் நிசான் நிறுவனம் வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது, மேக்னைட் காரில் புதியதாக குரோ (Kuro) எடிசனை நிசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய மேக்னைட் குரோ எடிசன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-showroom Price) ரூ.8.30 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
நிசான் மேக்னைட் காரில் 'என்-கனெக்ட்டா' (N-Connecta) என்கிற பெயரில் ஏற்கனவே ஒரு வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை அடிப்படையாக கொண்டதாகவே புதிய குரோ எடிசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விருப்பப்படுவர்கள் ரூ.11,000 என்கிற டோக்கன் தொகையை செலுத்தி மேக்னைட் குரோ எடிசனை முன்பதிவு (Book) செய்யலாம்.

புதிய நிசான் மேக்னைட் குரோ எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.8.30 லட்சத்தில் இருந்து ரூ.10.86 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. மற்ற மேக்னைட் வேரியண்ட்களை போன்று, புதிய குரோ எடிசனும் 1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் மற்றும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில், மேனுவல் & ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
| Variant | Ex-Showroom Price |
| Nissan Magnite Kuro Edition 1.0 MT | Rs. 8.30 lakh |
| Nissan Magnite Kuro Edition 1.0 AMT | Rs. 8.55 lakh |
| Nissan Magnite Kuro Edition 1.0 Turbo MT | Rs. 9.71 lakh |
| Nissan Magnite Kuro Edition 1.0 Turbo CVT | Rs. 10.86 lakh |
என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷனை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டுள்ள மேக்னைட் குரோ எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை இந்த அட்டவணையில் காணலாம். முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய மேக்னைட் குரோ எடிசன் காரில் அலாய் சக்கரங்கள் கூட கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் காரை சுற்றிலும் சில்வர் நிறத்திலான ஹைலைட்களை காண முடிகிறது.

மேக்னைட் குரோ எடிசன் காருக்கு உள்ளேயும் டேஸ்போர்டு, ஸ்டேரிங் சக்கரம், செண்டர் கன்சோல் பகுதி மற்றும் மேற்கூரை என ஒட்டுமொத்த கேபினும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், டேஸ்போர்டில் இரு டிஜிட்டல் திரைகள், அர்கமைஸ் சவுண்ட் சிஸ்டம், தன்னிச்சையாக டிம் ஆகக்கூடிய IRVM, ஐ-கீ ஆட்டோ அன்லாக் உள்ளிட்டவை இந்த புதிய மேக்னைட் காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யும் ஒரேயொரு காராக இருப்பதினாலேயே மேக்னைட்டில் முடிந்தவரை தனது முழு திறமைகளையும் காட்ட நிசான் முயற்சிக்கிறது. அதன் ஒருபகுதியாகவே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேக்னைட் குரோ எடிசனையும் பார்க்கிறோம். முற்றிலும் கருப்பு நிறத்தில் நிசான் மேக்னைட் காரை வாங்க விரும்புபவர்கள் புதிய மேக்னைட் குரோ எடிசனை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









