ஒரு காலத்துல ஓஹோன்னு கார் வித்த கம்பெனி! இவ்வளவு இவ்வளவு கோடி நஷ்டத்துல ஓடுதா?
நிஸான் நிறுவனம் உலகின் டாப் 10 வாகன தயாரிப்பாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இந்த பட்டியலில் இடம் பிடித்து வந்த இந்த நிறுவனம் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் விற்பனையில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனம் நிஸான். இந்நிறுவனம் உலகளவில் பிரபலமான வாகனங்களை தயாரித்து வருகிறது. உலகளவில் உள்ள டாப் 10 வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக நீண்ட ஆண்டுகளாக இருந்து வந்தது. ஆனால் இந்த டாப் 10 பட்டியலில் இருந்து இந்நிறுவனம் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது.

Nikkei Asia வெளியிட்டுள்ள தகவலின்படி நிஸான் நிறுவனம் சர்வதேச அளவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாத விற்பனையிறல் 6 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 16.1 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் டாப் 10 பட்டியலில் இருந்து இந்நிறுவனம் வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 33 சதவீத சிறப்பான வளர்ச்சியுடன் பிஒய்டி நிறுவனம் 8வது இடத்தை பிடித்துள்ளது. இது மட்டுமல்ல சுஸூகி நிறுவனம் நிஸான் நிறுவனத்தை முந்தியுள்ளது மொத்தம் 16.3 லட்சம் வகனங்களை விற்பனை செய்துள்ளது. அதாவது 20,000 வாகனங்கள் அதிகமாக விற்பனை செய்துள்ளது. கடந்த 21 ஆண்டுகளில் சுஸூகி நிறுவனம் நிஸான் நிறுவனத்தை முந்துவது இது தான் முதன் முறை.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிஸான் நிறுவனம் 104 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தொடர்ந்து 4 காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனம் 191 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது.

நிஸான் நிறுவனத்திற்க சீனா தான் மிகப்பெரிய மார்கெட்டாக இருக்கிறது. இந்த மார்கெட்டிலேயே இந்நிறுவனம் 18 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த மார்கெட்டில் வெறும் 2.5 லட்சம் கார்கள் தான் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2018ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 7.2 லட்சம் கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது விற்பனை 3ல் ஒரு பங்காக குறைந்துவிட்டது.
நிஸான் நிறுவனத்திற்கு அமெரிக்க மார்கெட் எப்பொழுதும் மந்தம் தான். ஜப்பான் மார்கெட்டில் அந்நிறுவனவம் வெறும் 2.2 மில்லியன் கார்களை மட்டுமே விற்பனை செய்து 10 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கடந்த 1993ம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்ட மிக குறைந்த விற்பனையாகும்.

நிஸான் நிறுவனம் நீண்ட காலமாக நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. முக்கிய அந்நிறுவனத்தின் ஆலைகளில் அதிக செலவு ஏற்படுகிறது. தொடர்ந்து சர்வதேச அளவில் அந்நிறுவனம் மார்கெட் பங்கை இழந்து வருகிறது. புதிய மாடல் கார்கள் எதுவும் இல்லை. இதனால் மிக மோசமான விற்பனையை பெற்று வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் உள்ள திண்டாட்டம் காரணமாக புதிய மாடல்களை கொண்டு வர திண்டாடி வருகிறது. இந்நிறுவனத்திடம் போதுமான கார்கள் இல்லை. இதை அந்நிறுவனம் சர்வதேச அளவில் சரி செய்தால் தான் இந்தியாவிலும் விற்பனை அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









