இந்த ஒரு கார் மட்டும் இல்லேனா கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான்! தனி ஆளா தாங்கி பிடிச்சிட்டு இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இந்த காரில் நிஸான் நிறுவனம் தற்போது 'சிஎன்ஜி கிட்' (CNG Kit) ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நேரத்தில் மற்றொரு முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை நிஸான் மேக்னைட் கடந்துள்ளது என்பதுதான் அந்த அறிவிப்பு. நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் சுமார் 4.5 வருடங்களில், 2 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை நிஸான் மேக்னைட் கடந்துள்ளது.

Nissan Magnite Side Design

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் வெறும் 2 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஒன்று நிஸான் மேக்னைட். மற்றொன்று நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail). இதில், நிஸான் எக்ஸ்-ட்ரெயில் மிகவும் விலை உயர்ந்தது (49.92 லட்ச ரூபாய்). எனவே அதன் விற்பனை எண்ணிக்கை மிகவும் குறைவு.

ஒரு மாதத்திற்கு 2 இலக்க எண்களில் மட்டுமே நிஸான் எக்ஸ்-ட்ரெயில் கார்கள் விற்பனையாகி வருகின்றன. ஆனால் நிஸான் மேக்னைட் காரின் விலை மிகவும் குறைவு. எனவே ஒவ்வொரு மாதமும் சுமாராக 2 ஆயிரத்திற்கும் அதிகமான நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனையாகி கொண்டுள்ளன.

Nissan Magnite

சொல்லப்போனால் இந்திய சந்தையில் நிஸான் நிறுவனத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதே மேக்னைட்தான். தற்போதைய நிலையில் நிஸான் மேக்னைட் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் 6.14 லட்ச ரூபாய் என்ற விலையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாப் வேரியண்ட்டின் விலை 11.76 லட்ச ரூபாயாக உள்ளது.

இந்த செய்தியில் நாங்கள் கூறியுள்ள அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும்.

இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடல் உடன் மட்டுமே தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிஎன்ஜி கிட் கிடைக்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 3 வருடங்கள் அல்லது 1 லட்சம் கிலோ மீட்டர் வாரண்டி வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கியா சொனெட் (Kia Sonet), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் மாருதி பிரெஸ்ஸா (Maruti Brezza) ஆகிய கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது.

அத்துடன் ரெனால்ட் கைகர் (Renault Kiger) போன்ற கார்களுக்கும் கூட நிஸான் மேக்னைட் நல்ல மாற்று ஆப்ஷன்தான். ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள் நிஸான் மேக்னைட் காரை பரிசீலனை செய்யலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 28, 2025, 23:38 [IST]
English summary
Nissan magnite 2 lakh units sales milestone check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+