30 கி.மீ மைலேஜ் தரும் சிஎன்ஜி காரை வெளியிட்ட நிஸான்! ரூ71,999 தான் எக்ஸ்டரா வருது!

நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காருக்கு டீலர்கள் பொருத்து ரெட்ரோ சிஎன்ஜி கிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ71,999க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கிட் ஏற்கனவே இருந்தாலும் அது மேனுவல் கியர் கார்களுக்கு மட்டுமே பொருந்தும்படி இருந்தது. தற்போது இது ஏஎம்டி கார்களிலும் பொருத்தக்கூடிய வகையில் மாற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதாலும், வாகனங்கள் மாசு வெளியீடு அதிகமாக இருப்பதாலும் மக்கள் பலர் மாற்ற ஏரிபொருளை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாருதி, ஹூண்டாய், டாடா ஆகிய நிறுவனங்கள் சிஎன்ஜி என்ற எரிபொருள் மூலம் இயங்கும் வகையில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

Nissan Magnite AMT CNG kit

சிஎன்ஜி பெட்ரோலை விட குறைவான விலையில் விற்பனையாகிறது. மேலும் இந்த எரிபொருளை பயன்படுத்தும் போது அதிக மைலேஜ் கிடைக்கிறது. இதனால் வாகனம் வாங்க விருப்புபவர்கள் சிஎன்ஜி வாகனங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் நிஸான் நிறுவனம் இப்படியாக சிஎன்ஜி விரும்பிகளை கவர மற்ற நிறுவனங்கள் போல் ஃபேக்டரியிலேயே சிஎன்ஜி பொருத்தப்பட்ட வாகனமாக தயாரிக்காமல் பெட்ரோல் வாகனங்களில் சிஎன்ஜியை பொருத்தும் ரெட்ரோ கிட்டை ஷோரூம்களில் விற்பனை செய்கிறது.

இதை வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பினால் அவர்கள் தேர்வு செய்த கார் போக கூடுதலாக ரூ71,999 செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் டீலர்களே அந்த வாகனத்தில் இந்த கிட்டை பொருத்தி கொடுப்பார்கள். இந்த கிட் ஏறகனவே விற்பவனையில் இருந்தாலும் அது மேனுவல் கியர் கார்களுக்கு பொருந்தும்படியா கிட்டே பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில் நிஸான் நிறுவனம் ஏஎம்டி வேரியன்ட்களிலும் பொருத்தும் கிட்டை தற்போது அறிமகப்படுத்தியுள்ளது.

Nissan Magnite AMT CNG kit

நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 5 விதமான வேரியன்ட்களில் ஏஎம்டி இஇசட் ஸ்விட் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இந்த கார் தற்போத சிஎன்ஜி கிட் உடன் வாங்கும் போது அதன் விலையும் சேர்த்து ரூ71,999 செலுத்த வேண்டும் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட வாகங்கள் ரூ6.89 லட்சம் முதல் ரூ9.70 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது.

இப்படியாக பொருத்தப்பபடும் சிஎன்ஃி கிட்களுகஅக 1 லட்சம் கி.மீ அல்லது 3 ஆண்டுகள் எது முதலில் வருகிறதோ அதுவரை வாரண்டி வழங்கப்படுகிறது. இந்த கிட் பொருத்தப்பட்டதும். வாகனம் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலுமே இயங்கும் வகையில் மாற்றப்படும் அதன்படி வானகத்தில் ஸ்விட்ச் வழங்கப்படும் அதை மாற்றி நீங்கள் வாகனத்தின் எரிபொருளை மாற்றிக்கொள்ள முடியும்.

Nissan Magnite AMT CNG kit

இந்த நிஸான் மேக்னைட் காரில் 1.0 லிட்டர் பெடரோல் இன்ஜி பொருத்தப்ப்டடுள்ளது. இது 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டாரக் திறனையும் வெளிப்படுத்துமு். இந்த கார் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது போக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்இன்ஜின் ஆப்ஷனும் இந்த காரில் இருக்கிறது. இந்த வாகனம் ரியர் வேர்டில் சிஎன்ஜியில் ஒரு கிலோவிற்கு 24 கி.மீ சிட்டிக்குள்ளும், 30 கி.மீ ஹைவேயிலும் மைலேஜ் கிடைக்கிறது என் கூறப்பட்டுள்ளுது. இது மேனுவல் கியரில் உள்ள மைலேஜ் தான் ஏஎம்டியில் இன்னும் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி விரும்பிகள் பலர் மேனுவல் கியரை தான் தேர்வு செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக கட்டாயப்படத்தப்பட்டு வந்த நிலையில் ஏஎம்டியில் சிஎன்ஜி கிட் வழங்கப்பட்டது வரவேற்றக்க தக்கது தான் இதனால் மைலேஜ் அதிகம் ஆகும். இதன் காரணமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 17, 2025, 8:45 [IST]
English summary
Nissan magnite amt cng kit launched with dealerfit option rs 71999
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X