வெறும் ரூ75 ஆயிரம் அதிகமா குடுத்தா போதும்! இந்த காரின் மைலேஜ் அதிகமாகிடும்!
நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காரின் சிஎன்ஜி ரெட்ரோஃபிட்மென்ட் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ75 ஆயிரம் கூடுதல் விலையில் சாதாரண பெட்ரோல் மேக்னைட் காரை சிஎன்ஜி காராக மற்ற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரெட்ரோஃபிட்மென்ட் எங்கு நடத்தப்படுகிறது. இதை செய்வது எப்படி . இ்நத தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் தற்போது மேக்னைட் காரை தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த கார் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற காராக இருக்கிறது. இந்த காருக்கு போட்டியாக விற்பனையாகும் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் சிஎன்ஜி வேரியன்ட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில் நிஸான் நிறுவனம் இந்த சிஎன்ஜி செக்மெண்டை பிடிக்க தற்போது புதிய ஸ்டைல் ஒன்றை கையாண்டுள்ளது.

அதன்படி நிறுவனம் நிஸான் மேக்னைட் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் விரும்பினால் தங்கள் காரை சிஎன்ஜி ரெட்ரோஃபிட்மென்டை பொருத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இதை டீலர்ஷிப் அளவில் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக டில்லி, உ.பி,மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள டீலர் ஷிப்களில் மட்டும் இந்த ரெட்ரோஃபிட்மென்ட் அமலுக்கு வருகிறது. அடுத்தகட்டமாக மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
இந்த சிஎன்ஜி ரெட்ரோஃபிட்மென்டிற்கான வாரண்டி 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கி.மீ வரை வழங்கப்படுகிறது. இந்த ரெட்ரோஃபிட்மென்ட் சிஎன்ஜி கிட் மாசு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து சோதனைசெய்யப்பட்டதாக வழங்கப்படுகிறது. பெட்ரோல் செலவை குறைக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல ஆப்ஷனை வழங்குவதற்காக இந்த ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஷன் நிஸான் மேக்னைட் காரில் 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட வேரியன்டில் மட்டுமே பொருத்தப்படுகிறது. ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வேரியன்ட்கள், டர்போ சார்ஜ்டு இன்ஜின் கொண்ட வேரியன்ட்களில் இந்த சிஎன்ஜி கிட்டை பொருத்த முடியாது. இந்த சிஎன்ஜி கிட் பொருத்தப்படும் போது காரின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அதே நேரம் உள்பக்கம் சிஎன்ஜிக்கான ஸ்விட்ச் மட்டும் பொருத்தப்படும்.
இந்த நிஸான் மேக்னைட் கார் உலகம் முழுவதும் உள்ள 65 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. வலது பக்க ஸ்டியரிங் வீல் கொண்ட நாடுகள், இடது பக்க ஸ்டியரிங் வீல் கொண்ட நாடுகள் என இரண்டு வெர்ஷனிலும் விற்பனையாகிறது. இந்த கார் இந்தியாவில் டாடா பஞ்ச் சிஎன்ஜி, ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி கார்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது. இந்த கார் இந்தியாவில் ரூ6.89 லட்சம் முதல் ரூ10.02 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தனது க்விட், கைகர், மற்றும் டிரைபர் ஆகிய கார்களுக்கு இப்படியான சிஎன்ஜி ரெட்ரோஃபிட்மென்ட் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த நிஸான் மேக்னைட் காருக்கும் அறிமுகம் செய்துள்ளத. ரெனல்ட் நிறுவனமும் நிஸான் நிறுவனமும் சேர்ந்து தான் வாகனங்களை தயாரிக்கின்றன. இருவரும் ஒரே தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள். பிராண்ட் பெயர் மற்றும் வேறு வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








