3 வருஷத்துக்கு நாங்க இருக்கோம்னு கார் கம்பெனியே வாரண்டி கொடுக்குது! தமிழ்நாட்டிலும் இனி வாங்கலாம்!

சிஎன்ஜி (CNG) கார்களுக்கு இந்தியா முழுவதும் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு பதிலாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட விலை குறைவான இயற்கை எரிவாயுவில் இயங்குவதாலும், அதிக மைலேஜை வழங்குவதினாலும் சிஎன்ஜி கார்களை அதிக பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, டாக்ஸி (Taxi) தொழிலில் ஈடுப்படுபவர்கள் இலாபகரமான வணிகத்திற்காக சிஎன்ஜி கார்களை வாங்க விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள சிஎன்ஜி கார் மாடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக நிஸான் மேக்னைட் சிஎன்ஜி (Nissan Magnite CNG) கார் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் சிஎன்ஜி கார் முதலாவதாக 7 இந்திய மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த 7 மாநிலங்களாவன, டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் கேரளா ஆகும்.

nissan magnite cng launched

நிஸான் மேக்னைட் கார் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டாலும், அதன் சிஎன்ஜி வெர்சன் முதலாவதாக இந்த 7 மாநிலங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது 2வது கட்டமாக தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் என 6 மாநிலங்களில் மேக்னைட் சிஎன்ஜி கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக, இந்தியாவில் மேக்னைட் சிஎன்ஜி விற்பனைக்கு கிடைக்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டுவராமல், இவ்வாறு சிறு சிறு பகுதியாக கொண்டுவரப்படுவதற்கு காரணம், மேக்னைட் சிஎன்ஜி காரில் சிஎன்ஜி உபகரணங்கள் நிஸான் தொழிற்சாலையில் பொருத்தப்படுவது இல்லை.

மோட்டோஸென் (Motozen) என்கிற அரசாங்கத்தால் அங்கீகாரம் பெற்ற 3ஆம் தரப்பு நிறுவனத்தால் அரசு அங்கீகாரம் பெற்ற மையத்தில் மேக்னைட் காரில் சிஎன்ஜி உபகரணங்கள் பொருத்தி வழங்கப்படும். இது நிஸான் நிறுவனத்தின் மேற்பார்வையில் நடந்தாலும், டீலர்ஷிப் ஷோரூம் லெவலில் நடைபெறும் பணியாகும் இது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறான டீலர்களால் நிஸான் ஷோரூம்கள் நடத்தப்படுவதினால்தான், மேக்னைட் சிஎன்ஜி கார்கள் ஒவ்வொரு மாநிலமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன.

nissan magnite cng launched

இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்யப்படும் ஒரேயொரு நிஸான் கார், மேக்னைட் ஆகும். இதன் சிஎன்ஜி வெர்சனில் 1 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதே என்ஜின் தான் சிஎன்ஜி அல்லாத மேக்னைட் காரிலும் பொருத்தப்படுகிறது. ஆனால், மேக்னைட் சிஎன்ஜி காரில் இந்த பெட்ரோல் என்ஜினை இயங்க வைக்க பெட்ரோல் நிரப்ப தேவையில்லை, சிஎன்ஜி நிரப்பலாம்.

அதேநேரம் அவசர காலத்திற்கு பயன்படுத்துவதற்கு சிறிய பெட்ரோல் டேங்கும் வழங்கப்படுகிறது. அதாவது, மேக்னைட் சிஎன்ஜி காரை பெட்ரோலிலும் ஓட்டலாம். மேக்னைட் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.89 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது, பெட்ரோலில் இயங்கும் வழக்கமான மேக்னைட் காரின் விலையை விட ரூ.75,000 அதிகமாகும்.

3ஆம் தரப்பு நிறுவனத்தால் சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டாலும், மேக்னைட் சிஎன்ஜி காரின் சிஎன்ஜி கிட்டிற்கு 3 வருட/ 1 லட்ச கிமீ உத்தரவாதத்தை நிஸான் வழங்குகிறது. சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட்ஸ்பேஸ் ஆனது சிறிய அளவில் வழங்கப்படும் என்கிற கருத்து பரவலாக நம் மக்களிடையே உள்ளது. ஆனால், மேக்னைட் சிஎன்ஜி காரில் 336 லிட்டர்கள் கொள்ளளவில் பூட் ஸ்பேஸ் பகுதியை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் மேக்னைட் காரை வாங்க நினைப்பவர்களும், அதிக மைலேஜ் உடன் கார் வாங்க நினைப்பவர்களும் மேக்னைட் சிஎன்ஜி காரை வாங்கி பயன்படுத்தலாம். 3 வருடங்களுக்கு/ 1 லட்ச கிமீ தொலைவிற்கு நிஸான் உத்தரவாதத்தை வழங்குவதால், தைரியமாக மேக்னைட் சிஎன்ஜி காரை வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 3, 2025, 21:14 [IST]
English summary
Nissan magnite cng launched in tamilnadu check price features all details here
மேலும்... #nissan #nissan magnite #cng car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+