மேட்-இன்-இந்தியா கார்களுக்கு வெளிநாடுகளிலும் கஸ்டமர்ஸ் கிடைப்பாங்க! நிஸான் போட்டிருக்கும் பக்காவான பிளான்!

நிஸான் (Nissan), ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். ஆனால், இந்திய மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. சமீப காலத்தில், இந்தியாவில் நிஸான் நிறுவனத்தில் இருந்து ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகும் காராக மேக்னைட் (Magnite) விளங்குகிறது. மற்ற நிஸான் கார்களின் விற்பனை நம் நாட்டில் இன்னும் படுமோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிற்கென நிஸான் உருவாக்கிய மேக்னைட் கார் சவுதி அரேபியா (Saudi Arabia)-இல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் மொத்தமாக படுத்துக்கிடந்த நிஸான் கார் மார்க்கெட்டை ஓரளவிற்கு தூக்கி நிறுத்திய கார், மேக்னைட் ஆகும். நிஸானின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-Compact SUV) காராக மேக்னைட் கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் நீளம் 4 மீட்டர்களுக்கும் சற்று குறைவாக உள்ளது.

magnite facelift launched saudi arabia

முழுக்க முழுக்க இந்திய கஸ்டமர்களையும், இந்திய சாலைகளின் தரங்களையும் கருத்தில் கொண்டு மேக்னைட்டை நிஸான் உருவாக்கப்பட்டது. அதன்பின், கிட்டத்தட்ட 4 வருடங்கள் கழித்து கடந்த 2024 அக்டோபர் மாதத்தில் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) கார் நம் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் தான் தற்போது சவுதி அரேபியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வலதுக்கை டிரைவிங் பின்பற்றப்படுகிறது. ஆனால், சவுதி அரேபியாவில் இடதுக்கை டிரைவிங் பின்பற்றப்படுகிறது. இதனால்தான், அந்த நாட்டில் காருக்குள் ஸ்டேரிங் சக்கரம் இடதுப்பக்கத்தில் இருப்பதை பார்க்கலாம்.

magnite facelift launched saudi arabia

இவ்வாறான இடதுக்கை டிரைவிங்கை கொண்ட நாட்டில் புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இத்தகைய பெருமையை பெறும் சவுதி அரேபியாவின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் ஸ்டேரிங் சக்கரத்தின் பொசிஷனை தவிர்த்து, கார் மொத்தமும் இந்தியாவின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரை தான் முழுக்க முழுக்க ஒத்துக் காணப்படுகிறது.

சவுதி அரேபியாவின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் முக்கியமான அம்சங்கள் என்று பார்த்தால், காருக்குள் டேஸ்போர்டில் 7 இன்ச்சில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 8 இன்ச்சில் டச் ஸ்க்ரீன், ரிமோட் என்ஜின் ஸ்டார்ட், காற்று அயனியாக்கி மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

magnite facelift launched saudi arabia

புதிய டிசைன் மற்றும் தொழிற்நுட்பங்கள் உடன் பவர்ஃபுல்லான என்ஜின் சவுதி அரேபியாவின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், இந்த காரில் பொருத்தப்பட்டு இருக்கும் 1 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 98 பிஎச்பி மற்றும் 152 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதே டர்போ என்ஜின் தான் இந்தியாவிலும் வழங்கப்படுகிறது என்றாலும், இந்தியாவில் என்ஜின் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், சவுதி அரேபியாவில் சிவிடி (CVT) என்கிற ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிஸான் காரில் பாதுகாப்பு அம்சங்களாக, 360-டிகிரி கேமரா, ஏபிஎஸ், ஆட்டோ ஹெட்லைட்கள், 3-பாயிண்ட் சீட்பெல்ட்ஸ் மற்றும் ஏர்பேக்ஸ் வழங்கப்பட்டுள்ளன.

magnite facelift launched saudi arabia

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நிஸான் பிராண்டில் கார் வாங்கும் நிறைய பேரது தேர்வாக மேக்னைட் இருப்பதில் இருந்தே இந்த காரின் தரத்தை அறியலாம். இத்தகைய காரை அறிமுகம் செய்து இருப்பதன் மூலமாக, சவுதி அரேபியாவில் நிஸான் நிறுவனத்தின் வணிகம் மேம்படலாம். குறிப்பாக, அந்த நாட்டில் குறைந்த விலையில் கார் வாங்க விரும்புவோரின் தேர்வு நிஸான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் காராக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 25, 2025, 11:59 [IST]
English summary
Nissan magnite facelift launched saudi arabia with trubo engine
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X