இந்த காருக்கும் 5 ஸ்டார் ரேட்டிங்கா? ஒரு காலத்துல டப்பா காருன்னு சொன்னாங்களே!

நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காரை குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தியது. இதில் இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே கார் இந்த சோதனையில் வெறும் 2 ஸ்டார்களை மட்டுமே பெற்ற நிலையில் தற்போது பல அப்டேட்களை செய்து 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் நிறுவனம் இந்தியாவில் மேக்னைட் என்ற காரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதற்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே கார் குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்பொழுது இந்த கார் 2 ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த அப்டேட் உடன் மீண்டும் குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Nissan Magnite

இந்த முறை காரில் 6 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பாதுகாப்பு சோதனையில் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இந்த காரின் 3 வேரியன்ட்கள் இந்த பாதுகாப்பு சோதனையில் உட்படுத்தப்பட்டன.

அதன்படி பேஸ் வேரியன்டான மேக்னைட் கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பிலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் 2 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 24.49 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 18.39 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

Nissan Magnite

மிட் வேரின்டை பொருத்தவரை பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 26.51 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 36 புள்ளிகளையும் பெற்றுள்ளது. டாப் வேரியன்டை பொருத்தவரை பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34க்கு 32.31 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49க்கு 33.64 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

குளோபல் என்கேப் சோதனையில் உட்படுத்தப்பட்ட கார் இந்தியா மட்டுமல்லாமல் ஆப்பிரிக்காவிலும் விற்பனையாகும் மாடலாக உள்ளது. இந்த காரில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் செய்து மக்களின் நம்பிக்கையை பெற இந்த சோதனையை அந்நிறுவனம் செய்துள்ளது. இதனால் இந்த காரின் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை ரூ6.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதே போல இந்த காரின் டாப் வேரியன்ட் ரூ11.92 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மார்கெட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்நிறுவனத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் கார் இது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்கும் மக்களுக்கு பாதுகாப்பு மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதனால் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இந்தகார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 24, 2025, 20:30 [IST]
English summary
Nissan magnite global ncap rating improves to 5 stars
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+