கார் வாங்க சரியான நேரம் வந்தாச்சு... ரூ.55,000 மிச்சப்படுத்தலாம் என்பது சாதாரண விஷயம் இல்லைங்க!

நிஸான் (Nissan), பிரபலமான ஜப்பானிய கார் நிறுவனம். உலகின் பல நாடுகளில் வலுவான மார்க்கெட்டை கொண்டிருப்பினும், இந்திய கார்கள் சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. முடிந்தவரையில், இந்தியர்களுக்கும், இந்திய சூழலுக்கும் ஏற்ற வகையிலான விலை குறைவான கார்களை அறிமுகம் செய்யவே நிஸான் நிறுவனம் முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் வெளிப்பாடாக, கடந்த 2020ஆம் ஆண்டில் நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்த கார், மேக்னைட் (Magnite) ஆகும். நிஸானின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி (Sub-compact SUV) ரக காராக மேக்னைட் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போதில் இருந்து இப்போதுவரையில் மேக்னைட் காரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, 2020 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் இந்தியாவில் நிஸான் நிறுவனத்துக்கு 2வது இன்னிங்க்ஸை ஏற்படுத்தி கொடுக்க போகும் கார் என்கிற அளவிற்கு மேக்னைட் புகழ்ந்து பேசப்பட்டது.

nissan magnite hattrick carnival

இப்போதும் மேக்னைட் கார் விற்பனை சிறப்பாகவே உள்ளது என்றாலும், மற்ற நிஸான் கார்கள் எதுவும் அதிகமாக விற்பனையாகாததால் மேக்னைட்டின் பிரபலமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில், மேக்னைட் காரை நோக்கி மேலும் கஸ்டமர்களை ஈர்க்கும் விதமாக புதிய சலுகைகளை நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேக்னைட் எஸ்யூவி காருக்கு நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.55,000 வரையிலான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த ரூ.55,000 வரையிலான சலுகைகளின்படி, மேக்னைட் காரை வாங்கும் கஸ்டமர்கள் என்னென்ன மாதிரியான சலுகைகளை பெறலாம் என்பதை நிஸான் நிறுவனம் விரிவாக தெரிவிக்கவில்லை. மேக்னைட் காருக்கான இந்த சலுகைகள் ஏப்ரல் 15ஆம் தேதி வரையில் மட்டுமே இருக்கும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

nissan magnite hattrick carnival

ஏப்ரல் 15க்குள் நிஸான் மேக்னைட் காரை வாங்குபவர்கள் அதிகப்பட்சமாக ரூ.55,000 வரையிலான பணத்தை மிச்சப்படுத்தலாம். அதாவது, சலுகையை பெறுவதற்கான சில தகுதிகள் இல்லையென்றால் சலுகையின் மூலம் மிச்சப்படுத்தும் தொகையும் குறையும். இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள நிஸான் டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.

இந்த வழக்கமான சலுகைகள் இல்லாமல், விழாக்கால சலுகை என்கிற பெயரில் ரூ.10,000 வரையிலான சலுகையினையும் மேக்னைட் காரை வாங்கும் கஸ்டமர்களுக்கு நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. இவை மட்டுமின்றி, மேக்னைட் காரை வாங்குபவர்கள் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கவும் நிஸான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

nissan magnite hattrick carnival

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளின் மூலம் நிஸான் மேக்னைட் காரின் விற்பனை அதிகரிக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். ஆனால், ஏற்கனவே மேக்னைட் கார்களின் விற்பனை சிறப்பானதாகவே உள்ளது. 2020 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காரின் விற்பனையில் 1 லட்சத்து 50 ஆயிரம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் நிஸான் கடந்தது.

இந்தியாவின் நிஸான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மேக்னைட் காரின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 1 வருட காலக்கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கார்களை இந்தியாவில் நிஸான் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

2017-18ஆம் காலக்கட்டத்திற்கு பிறகு சுமார் 7 வருடங்கள் கழித்து இந்தியாவில் கடந்த 1 வருடத்தில் அதிக கார்களை நிஸான் விற்பனை செய்துள்ளது. இதில் நிஸான் மேக்னைட் காரின் பங்களிப்பு மிக அதிகம் ஆகும். 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான 1 வருடத்தில் 99 ஆயிரம் கார்களை இந்தியாவில் இருந்து நிஸான் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இது முந்தைய 2023-24ஆம் ஆண்டை விட சுமார் 35% அதிகமாகும். கடந்த 1 வருடத்தில் நிஸான் விற்பனை செய்த 99 ஆயிரம் கார்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஏறக்குறைய 71 ஆயிரம் ஆகும். மீதி 28 ஆயிரம் நிஸான் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 9, 2025, 23:39 [IST]
English summary
Nissan magnite hattrick carnival benefits upto rupees 55000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X