2 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! இந்த ஒரு காரை நம்பி தான் கம்பெனியே ஓடிட்டு இருக்குது!
இந்தியாவில் ஏகப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. பல்வேறு விதமான வாகனங்களை அந்நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ஒரே ஒரு காரை நம்பி இந்தியாவில் ஒரு நிறுவனம் செயல்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இந்நிறுவனத்தின் ஒரு கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இவ்வளவு நேரம் நாம் நிஸான் நிறுவனத்தை பற்றி தான் பேசி வருகிறோம். நிஸான் நிறுவனம் இந்தியாவில் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. நிஸான் மேக்னைட் மற்றும் நிஸான் எக்ஸ்- டிரையல், இந்த இரண்டு கார்களை தவிர புதிய கார்களை களம் இறக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தாலும் தற்போது இதில் நிஸான் மேக்னைட் காரை மட்டுமே நம்பி அந்நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது.

நிஸான் எக்ஸ்-டிரையல் கார் கடந்த ஜூன் மாதம் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. ஆனால் நிஸான் மேக்னைட் கார் மொத் 1313 கார்கள் ஒரே மாதத்தில் விற்பனையாகியுள்ளது. இந்த காரின் போட்டி தயாரிப்புகளை ஒப்பிடும் போது விற்பனை குறைவு தான் என்றாலும் ஒரே ஒரு காரை மட்டுமே சிறப்பாக விற்பனை செய்யும் நிறுவனத்தை நம்பி மக்கள் அந்த காரை வாங்குவது ஆச்சரியம் தான்.
நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை ரூ6.14 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் டாடா பஞ்ச், டாடா நெக்ஸான், ஹூண்டாய் எக்ஸ்சென்ட், ஹூண்டாய் வென்யூ, கியா சோனட், மாருதி ஃபிராங்க்ஸ், மாருதி பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை இந்திய மார்கெட்டில் பிரபலமான காராக இருகு்கிறது. இந்த கார் கடந்த 2020ம் ஆண்டு தான் இந்திய மார்கெட்டில் அறிமுகமானது. அறிமுகமாகி 5 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இந்த கார் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் அப்டேட் செய்யப்பட்டது.
சமீபத்தில் இந்த காரின் ரெட்ரோ ஃபிட் சிஎன்ஜி கிட்டடை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ரூ75,000 கூடுதல் செலவில் இந்த காருக்க சிஎன்ஜி கிட்டை பொருத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காரில் 1.0 லி டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனத்தின் மீது மக்கள் எவ்வளவு நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதை இந்த காரின் விற்பனை காட்டுகிறது. இந்நிறுவனம் இந்த நம்பிக்கைக்கு ஈடு செய்யும் வகையில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









