புது வருஷம் பிறந்ததும் இந்த காரோட விலை கூடுது! இப்ப வாங்குனா விலை கம்மி தான்!

நிஸான் நிறுவனம் தனது வாகனங்களின் விலையை வரும் ஜனவரி மாதம் முதல் 3 சதவீதம் வை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் ஒரே ஒரு காரை மட்டுமே தற்பேஆது இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த விலையேற்றம் அந்த க்ஷஒரு காருக்கு மட்டுமே அமலுக்கு வரும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது நிஸான் மேக்னைட் என்ற ஒரே ஒரு காரை மட்டுமே அந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. இதற்கு நல்ல வரவேற்பு னாள்ள நிலையில் வரும் ஜனவரி மாதம் முதல் இந்த காரின் விலையை உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Nissan Magnite

தற்போது நிஸான் நிறுவனம் மேக்னைட் என்ற காரை ரூ5.61 லட்சம் என்ற விலையில் விற்பனவை செய்து வருகிறது. இது விலைஉயர்வுக்கு பிறகு ரூ5.78 லட்சம் என விலை உயரப்போகிறது. இந்த ஜனவரி மாதம் நிஸான் நிறுவனம் மட்டுமல்ல மெர்சிடீஸ் பென்ஸ், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் மற்றும் பிஎம்டபிள்யூ மோட்டோராட் ஆகிய நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்விற்கு வாகன தயாரிப்பு செலவு அதிகரித்தது, வாகனங்களை எடுத்து செல்லும் போக்குவரத்து செலவு அதிகரித்தது. மற்றும் சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Nissan Magnite

தற்போது நிஸான் நிறுவனத்திடம் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையில் இருந்தாலும் இந்நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இதன்படி இந்நிறுவனம் பி செக்மெண்ட் எம்பிவி, 7 சீட்டர் எஸ்யூவி, புதி யமிட் சைஸ் எஸ்யூவி, ஆகிய கார்கள் களம் இறங்குகிறது. இந்த கார்கள் எல்லாம் 2026ம் ஆண்டிலேயே களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.

நிஸான் நிறுவனம் கிராவேட் என்ற காம்பேக்ட் எம்பிவி காரை வெளியிடப்போகிறது. இதற்கிடையில் டெக்டான் எஸ்யதுவி காரும் களத்திற்கு வரவுள்ளது. இது போக 3வதாவக ஒரு 7 சீட்டர் எஸ்யூவி காரையும் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதில் டெக்டான் கார் 2026 மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

நிஸான் நிறுவனம் இந்த டெக்டான் காரை முதலில் வெளியிட திட்டமிட்டுள்ளது. 7 சீட்டர் எஸ்யூவி காரை 2027ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது வரை மேக்னைட் என்ற ஒரே ஒரு கார் மட்டும் இந்தாலும் விரைவில் 4 செக்மெண்ட்களில் காரை களம் இறக்கவுள்ளது.இந்நிலையில் விசிபிளிட்டி மற்றும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க நிஸான் நிறுவனம் தனது டீலர்ஷிப்பை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

இதில் டெக்டான் கார் அதிக போட்டி நிறைந்த செக்மெண்டிற்குள் களம் இறங்குகிறது. இந்தகார் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி விக்டோரிஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், எம்ஜி அஸ்டர், ஹோண்டா எலவேட், டாடா கர்வ், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஆகிய கார்களுக்க போட்டியாக களம் இறங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காரை இந்தியாவில் களம் இறக்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து புதிய கார்கள் களம் இறங்குகிறது. இந்நிலையில் இந்த விலை உயர்வு மற்ற நிறுவனங்களை போல இந்நிறுவனமும் அறிவித்துள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய பாதிப்பை எல்லாம் ஏற்பத்தாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 24, 2025, 16:06 [IST]
English summary
Nissan magnite to get 3 percent price hike in january 2026
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+