தமிழகத்துல தயாரிக்கப்பட்ட லெஃப்ட் ஹண்ட் டிரைவ் கார்! கொடியசைத்து வழி அனுப்பி வைத்த நிறுவனம்.. யாருக்கு தெரிமா?

இந்தியாவில் வலது கை பக்கம் ஓட்டு வசதிக் கொண்ட கார்களே புழக்கத்தில் உள்ளன. இந்த மாதிரியான சூழலில் தமிழகத்தில் இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட கார் தயாரிக்கப்பட்டதாகவும் அது உற்பத்தி ஆலையில் இருந்து கொடி அசைத்து வழி அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான நிஸான் (Nissan)-னே அந்த இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட கார் தயாரித்த பிராண்டு ஆகும்.

இது தன்னுடைய சென்னை ஆலையில் வைத்தே இந்த ரக கார்களை தயாரித்து இருக்கின்றது. தன்னுடைய முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான மேக்னைட் (Magnite) கார் மாடலையே இடது கை பக்கம் ஓட்டும் வசதியுடன் அது தயாரித்து இருக்கின்றது. இவற்றையே தற்போது நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

Nissan exports lhd magnite units

முதல் கட்டமாக 2,900 யூனிட்டுகள் வரை ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. விரைவில் 7,100 யூனிட்டுகள் இந்த இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட நிஸான் மேக்னைட் கார்களை மேலும் சில வெளிநாட்டு சந்தைகளுக்காக அனுப்பி வைக்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய பசிப்பிக்கின் குறிப்பிட்ட சில சந்தைகளுக்கே இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட மேக்னைட் கார் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. இந்த கார் மாடல்கள் கடல் மார்க்கமாக கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் விலை குறைவான எஸ்யூவி ரக கார் மாடலே மேக்னைட் ஆகும். தமிழகத்தில் தயாரிக்கப்படும் இந்த கார் மாடலுக்கு உலக நாடுகளிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே தற்போது ஆயரிக் கணக்கான யூனிட் இடது கை பக்கம் ஓட்டும் வசதிக் கொண்ட மேக்னைட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் சிறந்த கார் மாடலாக இது விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இதன் ஒரே ஒரு யூனிட் மட்டுமே ரூ. 6.12 லட்சம் என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது விற்பனைக்கு வந்த புதிதில் ரூ. 5 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது.

எல்இடி மின் விளக்குகள், தொடுதிரை வசதியுடன் கூடிய 8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது. அதுமட்டுமல்ல, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி மற்றும் கார் இணைப்பு வசதி, ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் மியூசிக் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் போன்ற பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் நிஸான் வழங்கி இருக்கின்றது. ஏற்கனவே கூறியதைப் போல இது ஓர் பாதுகாப்பான கார் மாடல் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த காரில் ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவையாக இரட்டை ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் லான்ச் கன்ட்ரோல் ஆகியவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2025, 17:37 [IST]
English summary
Nissan motor india exports over 10000 left hand drive magnite units
மேலும்... #nissan #nissan magnite #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+