நீங்க போலீஸா?.. இல்ல பாதுகாப்பு படை வீரரா?.. குடியரசு தினத்துக்கு இப்பவே ஆஃபரை அறிவிச்சுட்டாங்க..
முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு ஆஃபர்களை அறிவித்து இருக்கின்றது. நிஸான் மோட்டார் (Nissan Motor India), இந்த நிறுவனமே இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையை அறிவித்து இருக்கின்றது. 'போல்டு ஃபார் தி பிரேவ்' (Bold For The Brave Offer) எனும் பெயரிலேயே தன்னுடைய குடியரசு தின சலுகையை அது அறிவித்து இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் தன்னுடைய மிக முக்கியமான தயாரிபபான மேக்னைட் (Magnite)-டை இந்த திட்டத்தின்கீழ் சலுகை விலையிலும், அதிக பலன்களுடனும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
ஆனால், இந்த சலுகையானது காவல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் போன்றோருக்கு மட்டுமே பொருந்தும். இது பொதுமக்களுக்கான சலுகை கிடையாது. மத்திய மற்றும் மாநிலம் என இரண்டையும் சேர்ந்தவர்களால் இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, இந்திய ராணுவம், விமானப் படை, கப்பற்படை, பாராமிலிட்டரி உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வரும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு என்றே பிரத்யேகமாக இந்த ஆஃபரை நிஸான் அறிவித்து இருக்கின்றது. தன்னலமற்று நாட்டின் பாதுகாப்பு பணியில் தங்களை ஈடுபடுத்தி வரும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாகவே இந்த ஆஃபரை நிஸான் அறிவித்து இருக்கின்றது.
தொடர்ந்து, வீரர்கள் மற்றும் காவலர்கள் இந்த சலுகையை தடையின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளையும் அது செய்திருக்கின்றது. இதன் அடிப்படையில் நிறுவனம் தற்போது 24X7 உதவியை அறிவித்து இறுக்கின்றது. தொடர்ந்து, +91 1800-209-3456 என்கிற எண்ணையும் அது அறிவித்து இருக்கின்றது.

இதன் வாயிலாக குடியரசு தின சலுகையை வாடிக்கையாளர்களால் தடையின்றி அனுபவித்துக் கொள்ள முடியும். இந்த சலுகையை நிறுவனம் அதன் அதிகம் விற்பனையாகும் கார் மாடலுக்கு அறிவித்து இருப்பது மொத்த மார்க்கெட்டுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. இந்தியாவில் நிஸான் மேக்னைட் காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சொல்லப் போனால், இந்த காரே நிறுவனத்தின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடல் ஆகும். 1.5 லட்சம் யூனிட்டுகளைக் கடந்து இது விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரை 2020 ஆம் ஆண்டு டிசம்பரிலேயே நிஸான் விற்பனைக்குக் கொண்டு வந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.
இப்போதும், விற்பனை மற்றும் புக்கிங்கில் இந்த நிறுவனம் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவின் 76 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு நிஸான் நிறுவனம் இந்த காரை சிறப்பு சலுகை விலையில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவலர்களுக்கு விற்பனைச் செய்ய முன் வந்திருக்கின்றது.
சிறப்பு சலுகை மற்றும் சிறப்பு பலன்கள் பற்றிய முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை. ஒரு சில ஆயிரம் ரூபாயை குறைத்தும், பிரத்யேக சேவைகளை சிறப்பு பலனாகவும் நிஸான் மேக்னைட் காருக்கு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வாயிலாக வீரர்களுக்கு சிறப்பு சேர்ப்பது மட்டுமல்ல, விற்பனையிலும் அது கணிசமான வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி 6 லட்ச ரூபாய் என்கிற குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்தியாவிலேயே இந்த கார் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும், இங்கிருந்து 60க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த காராகவும் இது காட்சியளிக்கின்றது. ஐந்துக்கு நான்கு ஸ்டார்களையே பதுகாப்பு விஷயத்தில் இது பெற்றிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் மாடல்களில் மேக்னைட்-ம் ஒன்றாகும். இந்த காரை காவலர்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு சலுகை விலையில் விற்பனைச் செய்ய நிஸான் முன் வந்திருப்பது பாராட்டிதலுக்கு உரிய நடவடிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications








