ஜப்பான்காரன் களத்துல எறங்கீட்டான்! வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல 7 சீட்டர் காரா! மாருதி ஆட்டம் க்ளோஸ் ஆக போகுது!

ஜப்பானை (Japan) சேர்ந்த உலக புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று நிஸான் (Nissan). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 கார்களை மட்டுமே நிஸான் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ் ட்ரெயில் (Nissan X-Trail) ஆகியவை ஆகும்.

இந்த வரிசையில் மூன்றாவதாக ஒரு புதிய காரை நிஸான் நிறுவனம் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அது 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் டிசம்பர் 18ம் தேதி (December 18) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Renault Triber Side Design

இந்த தகவலை நிஸான் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) கார் விற்பனையில் இருந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இது இந்திய சந்தையில் தற்போது கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் ஒன்றாகும்.

இந்த காரின் அடிப்படையில்தான் நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி ரக கார் உருவாக்கப்படவுள்ளது. எனவே ரெனால்ட் ட்ரைபர் காரை போலவே, நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரும் மிகவும் விலை குறைவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Renault Triber

ரெனால்ட் ட்ரைபர் காரின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளதால், ரெனால்ட் ட்ரைபர் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே CMF-A பிளாட்பார்ம்தான், நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று ரெனால்ட் ட்ரைபர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், நிஸான் நிறுவனத்தின் புதிய காரிலும் வழங்கப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை எல்லாம் தவிர, தற்போதைய நிலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு அதிநவீன வசதிகளையும், நிஸான் நிறுவனத்தின் புதிய எம்பிவி கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை வெறும் 5.76 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.

இது ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரும் கிட்டத்தட்ட இதே ஆரம்ப விலையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி காரின் வருகை, மாருதி சுஸுகி எர்டிகாவிற்கு (Maruti Suzuki Ertiga) நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 8.80 லட்ச ரூபாயாக உள்ளது.

இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். எனவே நிஸான் நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எம்பிவி கார், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி எர்டிகா காருக்கு மிகவும் விலை குறைவான மாற்று ஆப்ஷனாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 11, 2025, 23:55 [IST]
English summary
Nissan new 7 seater mpv unveil date december 18 check all details here
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+