கம்மி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் புதிய காரின் பெயர் வெளியானது!

நிஸான் தற்போது இந்தியாவில் மேக்னைட் மாடலை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான இது 2026ம் நிதியாண்டிற்குள் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதில் பிரபலமான மிட்-சைஸ் பிரிவில் ஒரு எஸ்யூவி மாடலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த எஸ்யூவி கார் ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாகக் கொண்டது. மேலும் Hyundai Creta, Kia Seltos, Maruti Grand Vitara, Honda Elevate, மற்றும் Skoda Kushaq போன்ற மாடல்களுடன் போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கான வரும் நிஸான் எஸ்யூவி, உள்ளூர்மயமாக்கப்பட்ட CMF-B தளத்தைப் பயன்படுத்தும். இந்த தளம் ரெனால்ட் டஸ்டர் மற்றும் அதன் 7-சீட்டர் வேரியன்ட் போரியலுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நிஸான் முன்னதாக வெளியிட்ட டீஸரில் முன்புறத்தில் கனெக்டெட் LED DRLகள், முக்கியமான ஹூட் லைன்கள், அகலம் முழுவதும் இரண்டு மெல்லிய குரோம் ஸ்ட்ரிப்கள், வலுவான முன்புற பம்பர் மற்றும் விரிவான வீல் ஆர்ச் போன்ற வடிவமைப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Nissan Kait

நிஸானின் மிட்-சைஸ் எஸ்யூவி பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், சமீபத்திய அறிக்கைகள் அதற்கு 'கைட்' என்று பெயரிடப்படலாம் என்று கூறுகின்றன. எனினும், இந்த பெயர் பிரேசிலில் ஒரு காம்பாக்ட் எஸ்யூவிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் அது இந்திய எடிசனிற்கும் பயன்படுத்தப்படுமா என்பது நிச்சயமில்லை. இந்த மாடலின் வெளிப்புற ஸ்டைல் டஸ்டரில் இருந்து வேறுபடுகிறது, இது உட்புற மாறுபாடுகளையும் கொண்டுள்ளது.

செய்தி ஊடகங்கள், கிரெட்டாவுடன் போட்டியிடும் நிஸான் அதிக அம்சங்களை டஸ்டரை விட வழங்கலாம் என்று கூறுகின்றன. எதிர்பார்க்கப்படும் கூடுதல் அம்சங்களில் பல டிரைவ் மோடுகள், 360-டிகிரி பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள், 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.

புதிய நிஸான் எஸ்யூவி, சென்னையில் உள்ள ரெனால்ட்-நிஸான் உற்பத்தி ஆலையில் ரெனால்ட் டஸ்டர் மற்றும் அதன் 7-சீட்டர் எடிசன்களுடன் இணைந்து தயாரிக்கப்படும். பவர்‌ட்ரெயின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்திய மாடலில் 156 bhp மற்றும் 254 Nm டார்க் கொடுக்கும் 1.3-லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இருக்க வாய்ப்புள்ளது.

இந்த மாடலுக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷன்கள் இரண்டும் கிடைக்கும். கூடுதலாக, இந்தியாவில் 140 bhp 1.6-லிட்டர் பெட்ரோல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தவும யோசனை செய்துவருகிறது. இந்த கார் அதிகம மைலேஜ் தரும் காராக இந்த கார் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் போட்டித்தன்மை வாய்ந்த ஆட்டோமொபைல் மார்கெட்டில் தனது நிலையை வலுப்படுத்த, உள்ளூர் விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட மாடல்களை தனது தயாரிப்பு வரிசையில் விரிவுபடுத்துவதன் மூலம் நிசான் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதனால் எதிர்காலத்தில் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டஸ்டர் கார் மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. எஸ்யூவி குறித்த அறிமுகத்தையே இந்தியாவில் இந்த கார் தான் துவங்கிவைத்தது என சொல்லலாம். இந்த கார் நிறுத்தப்பட்டது முதல் இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, May 12, 2025, 10:45 [IST]
English summary
Nissan is set to launch a new mid-size SUV in India by FY2026, aimed at competing with popular models such as Hyundai Creta. This strategic move will enhance Nissan's market presence with features tailored to local preferences.
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+