ஒரே ஒரு காரை தான் விக்குறாங்க! ஆனா அதை வாங்கவும் இவ்வளவு பேர் லைன்ல நிக்குறாங்களா?

நிஸான் நிறுவனம் கடந்த நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது மேக்னைட் என்ற ஒரே ஒரு மாடல் காரை தான் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காருக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் நிறுவனம் மேக்னைட் என்ற ஒரு காரை தான் இந்தியாவில் விற்பனை செய்து வருவதால் அந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையும் அந்த ஒரு மாடல் காரின் விற்பனை எண்ணிக்கையம் ஒன்று தான். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் மொத்தம் 1908 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டு நடந்த விற்பனையான 18.53 சதவீத விற்பனையான 2342 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 18.53 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும்.

Nissan Sales Breakup Nov 2025
நிஸான் மேக்னைட் காரை பொருத்தவரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும். இது 72 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வெர்ஷனும் உள்ளது. இது 100 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இரண்டு இன்ஜினும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கார் டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, கியா சோனட் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே அம்சங்கள், பாதுகாப்பிற்காக 65 ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்கள் உள்ளது.

Nissan Sales Breakup Nov 2025

இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ5.61 லட்சம் முதல் ரூ10.75 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தம் 48 விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் அதிக இடவசதி, நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ், சிட்டி பயணங்களுக்காக கார் வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

இந்த காரில் ஹைவே பயணங்கள், குறைந்த வேகத்தில் கிடைக்கும் ரைடு குவாலிட்டி, கேபின் அனுபவம், பிரிமியமான உட்புற கட்டமைப்பு, சன் ரூஃப், வென்டிலேட்டட் சீட்டுகள், ஆகிய இந்த காரில் உள்ள முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் இந்த ஒரு காரை மட்டுமே விற்பனை செய்து வந்தாலும் நல்ல டிமாண்ட் இருக்கிறது. கடந்த நவம்பர் கூட கிட்டத்தட்ட 2000 பேர் வாங்கியள்ளனர். இன்னும் பல மாடல்களை இந்நிறுவனம் வெளியிட்டால் அதற்கும் நல்ல டிமாண்ட் இருக்கும். இதானல் விற்பனை அதிகரித்து மார்கெட்டில் போட்டி அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

Nissan Sales Breakup Nov 2025

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக ஒரு நிறுவனம் ஒரு காரை மட்டும் விற்பனை செய்து வந்தால் அந்நிறுவனத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும், எப்பொழுது வேண்டுமானாலும் இந்நிறுவனம் தனது விற்பனையை நிறுத்தகூடும் என்பதால் இந்த வாகனத்தை சிலர் வாங்க தயங்குவார்கள். இந்த வாகனத்திற்கான சர்வீஸ் பிரச்சனைகள் வரும் என நினைப்பார்கள். அதையும் தாண்டி இந்த வாகனம் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 21, 2025, 11:35 [IST]
English summary
Nissan sales breakup nov 2025 magnite 2000 buyers
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X