31 நாளில் 9,675 பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க! வெளிநாட்டுல இதுக்கு செம டிமாண்ட்!
நவம்பர் மாதம் பிறந்துள்ளநிலையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த விற்பனை விபரங்களை நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்நிறுவனம் 1 மாத்ததில் மொத்தம் 9.6 ஆயிரம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் பெரும்பாலான கார்கள் வெளிநாடுகளுக்கு தான் ஏற்றுமதியாகியுள்ளது.இதனால் இந்நிறுவனம் சிறப்பான வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 9675 கார்களை விற்பனை செய்துள்ளதாக பதிவு செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 2402 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 7273 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்ப்டடுள்ளது. கடந்த செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடும் போது அக்டோபர் மாதம் 45 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. செப்டம்பர் இறுதியில் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்ததால் இந்த காரின் விலை கணிசமாக குறைந்தது. இதன் ஆன்ரோடு விலை டாப் வேரியன்டிற்கு ரூ1 லட்சம் வரை குறைந்தது. இது போக தீபாவளி என்பதாலும் விற்பனை அதிகமாகியுள்ளது.

ஆனால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் மட்டும் இந்நிறுவனம் 3121 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதை ஒப்பிடும் போது விற்பனை சரிவு தான். இந்நிறுவனம் நிஸான் மேக்னைட் என்ற காரை மட்டுமே அதிகமாக விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்தநிஸான் மேக்னைட் காரில் குரோ என்ற ஸ்பெஷல் எடிசன் கார் மெட்டாலிக் கிரே நிறத்தில் கொண்டு வரப்பட்டது. இதுவும் விற்பனை அதிகமானதற்கு முக்கியமான காரணமாக கூறப்படுகிறது.
இந்நிறுவனம் சமீபத்தில் தான் ஏற்றமதியில் புதிய சாதனையை படைத்தது. இந்நிறுவனம் இதுவரை 12 லட்சம் கார்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த கார்கள் எல்லாம் சென்னையில் உள்ள காமராஜர் துறைமுகம் மூலமாக தான் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிஸான் நிறுவனம் இந்தியாவின் தயாரிக்கப்பட்ட கார்களை 65 உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதன்படி ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. வலது பக்க டிரைவ், இடது பக்க டிரைவ் என இரண்டு விதமான கார்களுமே ஏற்றமதி செய்யப்படுகிறது.

நிஸான் நிறுவனம் அடுத்து 2 புதிய கார்களை இந்தியாவிற்குள் களம் இறக்க திட்டமிட்டுவருகிறது. அதன்படி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எம்பிவி கார் மற்றும் காம்பேக்ட் எஸ்யூவி ஆகிய கார்களை இ்நதியாவிற்குள் களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இதில் எம்பிவி கார் 2026ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். காம்பேக்ட் எஸ்யூவி காரின் பெயரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. நிஸான் டேக்டான் என அந்த காருக்கு பெயரிடப்பட்டள்ளது.
இதற்கிடையில் தனது மேக்னைட் காரில் குரோ எடிசனை வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த கார் மெட்டாலிக் கிரே நிறத்தில் வடிவமைக்கப்ப்டடிருந்தது. இது போக இந்த காரில் ரெட்ரோ ஃபிட்மென்ட் புரோகிராம் இருக்கிறது. இதன்படி ஷோரூம்களில் அதன் கார்களுக்கு சிஎன்ஜி ரெட்ரோ பிட்டிங்கை வழங்கி வருகிறது. இது ஏஎம்டி கியர் பாக்ஸ் கொண்ட ஆப்ஷனிலும் தற்போது வழங்கப்படுகிறது.

இது மட்டுமல்ல இந்நிறுவனம் அடுத்தடுத்து புதிய கார்களை களம் இறக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்நிறுவனம் நிஸான் டேக்டான் கார் போக ஒரு 7 சீட்டர் பி எம்பிவி, 7 சீட்டர் சி எஸ்யூவி ஆகிய கார்களையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிறப்பாக வளர்ந்து வரும் நிலையில் நிஸான் நிறுவனமும் வளர்ந்து வருகிறது. இந்நிறுவனத்தின் டேக்டான் கார் மார்கெட்டில் ஹிட்டாகிவிட்டால் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை இந்நிறுவனம் களம் இறக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









