ஜப்பான்காரன் ஆட்டத்த ஆரம்பிச்சுட்டான்! நடுக்கத்தில் மாருதி! மொத்த மார்க்கெட்டையும் மிரள விட போகும் கார் வருது!

ஜப்பானை (Japan) சேர்ந்த நிஸான் (Nissan) நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது தள்ளாடி கொண்டுள்ளது. வெறும் 2 கார்களை மட்டுமே விற்பனை செய்வதுதான் இதற்கு காரணம். நிஸான் நிறுவனம் தற்போதைய நிலையில், நிஸான் மேக்னைட் (Nissan Magnite) மற்றும் நிஸான் எக்ஸ்-ட்ரெயில் (Nissan X-Trail) என 2 கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

ஆனால் கூடிய விரைவில் 2 புதிய கார்களை நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்று 7 சீட்டர் எம்பிவி (7 Seater MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். இந்த காருக்கு நிஸான் க்ராவைட் (Nissan Gravite) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜனவரி) நிஸான் க்ராவைட் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

2025 Renault Duster

இதை தொடர்ந்து மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார் ஒன்றை நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆக மொத்தத்தில் அடுத்த 2 மாதங்களில், 2 புத்தம் புதிய கார்களை நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம் 2026ம் ஆண்டை மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொடங்க நிஸான் திட்டமிட்டுள்ளது.

நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக காருக்கு நிஸான் டெக்டான் (Nissan Tekton) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிஸான் க்ராவைட் காரானது, இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Nissan Gravite

அதே நேரத்தில் நிஸான் டெக்டான் காரானது, விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை, கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில் ரெனால்ட் டஸ்டர் காரின் புதிய தலைமுறை மாடல், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தையில் குடியரசு தினமான வரும் ஜனவரி 26ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என ரெனால்ட் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில், நிஸான் டெக்டான் கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ரெனால்ட் டஸ்டர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், அதில் வழங்கப்பட்டுள்ள அதே இன்ஜின் (Engine) மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் (Gear Box Options), நிஸான் டெக்டான் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் 2 கார்களிலும் வசதிகளின் (Features) பட்டியலும் ஒன்றாகவே இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரெனால்ட் டஸ்டர் காரில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில், நிஸான் டெக்டான் காரின் டிசைனில் (Design), நிஸான் நிறுவனம் ஏராளமான மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கு எல்லாம் நிஸான் டெக்டான் காரின் வருகை, விற்பனையில் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 18, 2025, 17:42 [IST]
English summary
Nissan tekton suv to be unveiled in february all you need to know
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+