ஸ்டாக்குல இருக்குற ஒரு கார் கூட விக்கல! 7 பேர் போற காருக்கு இப்படி ஒரு நிலைமையா?
நிஸான் நிறுவனம் பிரிமியம் செக்மெண்டில் வாகனங்களை எக்ஸ்-டிரையல் என்ற வாகனத்தை விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒரு கார் கூட விற்காமல் இருந்துள்ளது. இது கடந்த மாதம் மட்டுமல்ல அதற்கு முந்தைய மாதமும் இதேநிலை தான் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நிஸான் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் குறைவான எண்ணிக்கையிலேயே மாடல்கள் உள்ளன. இதனால் குறைவான விற்பனையை தான் பெற்று வருகிறது. இந்நிறுவனத்தின் மேக்னைட் கார் தான் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிறுவனம் சொகுசு காராக எஸ்-டிரையல் என்ற காரையும் விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இந்நிறுவனத்தின் விற்பனை விபரங்கள் வெளியாாகியுள்ள நிலையில் ஒரு எக்ஸ்-டிரையல் கார் கூட விற்பனவையாகவில்லை. இந்த கார் தயாரிக்கப்பட்டு ஸ்டாக்கில் இருந்தும் கார்கள் விற்பனையாகவில்லை. இந்த காரில் உள்ள அம்சங்கள் சிறப்பாக இருகு்கிறது. 7 பேர் பயணிக்கலாம் என உள்ளிட்ட பல சிறந்த அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.
நிஸான் நிறுவனம் தனது எக்ஸ் டிரையல் காரை ரூ4.92 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் உலக தரமான பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த காரில் 7 ஏர்பேக்குகள் உள்ளன. இந்த கார் டி1 செக்மெண்ட் காராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஏராளமான அம்சங்களும் உட்புகுத்தப்பட்டுள்ளது.

இந்த கார் 4 வீல் டிரைவ் ஆப்ஷன் உடன் வருகிறது. இந்த காரின் உட்புறம் முழுமையாக பிரிமியம் அம்சங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் விற்பனையாகும் செக்மெண்டில் விற்பனையாகும் மற்ற கார்களுக்கு கடும் போட்டியை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளுது. டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி ஹெக்டர் பிளஸ், ஹூண்டாய் டுஸான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறது.
இவ்வளவு அம்சங்கள் இருந்தும் இந்த கார் குறைவான வறி்பனையாகி வருகிறது. இதற்க முக்கியமாகன காரணம் நிஸான் நிறுவனம் மிக குறைவான கார்களை மட்டுமே விற்பனை செய்து வருவது மக்கள் மத்தியில் இந்த பிராண்ட் குறித் விழிப்புணர்வை இல்லாமல் செய்து விடுகிறது. இது போக இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வோர்க் குறைவாக இருக்கிறது.

அதே நேரம் இந்த காரின் விலையும் அதிகமாக இருக்கிறது. இந்த காரை வாங்க நினைக்கும் பலர் அதிக விலையால் வேறு வாகனங்களை நோக்கி நகர்ந்து விடுகின்றனர். முக்கியமாக டாடா ஹாரியர், மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகிய கார்கள் தான் இந்த காரின் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கிறது. இதனால் இந்த கார் விற்பனையாக திண்டாடி வருகிறது. இந்த கார் இறக்குமதி செய்யப்படுவதால் தான் அதிக விலையில் விற்பனயைாகிறது. இந்தியாவில் இந்த காரை தயாரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டால் விலை குறையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிஸான் நிறுவனம் இந்த காரை குறைவான விலைக்கு கொண்டு வந்தால் நிச்சயம் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த விலையில் இந்தியாவில் இதை விட சிறந்த கார்கள் கிடைப்பதால் பலர் அந்த கார்களை தேர்வு செய்கின்றரன். கடந்த 7 மாதத்தில் மொத்தமே 111 கார்கள் தான் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









