ஒரு மாசம் முழுக்க முக்கி முக்கி வித்தும் ஒருத்தர் கூட வாங்கல! காரணம் என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்த கார்களுக்கு, மிகப்பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. இதற்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) ஒரு உதாரணம். இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங் என டொயோட்டா ஃபார்ச்சூனரை குறிப்பிடலாம். இதற்கு போட்டியாக ஏராளமான கார்கள் வந்து விட்டன.

ஆனால் இன்னமும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்தான், இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டின் கிங்-ஆக திகழ்ந்து வருகிறது. மறுபக்கம் அதன் நேரடி போட்டி மாடல்கள் எல்லாம் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ளன. இதற்கு நிஸான் எக்ஸ் ட்ரெயில் (Nissan X Trail) ஒரு உதாரணம்.

Nissan X Trail Interior Design

உலகம் முழுவதும் தற்போது வரை கிட்டத்தட்ட 80 லட்சம் நிஸான் எக்ஸ் ட்ரெயில் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருப்பது நிஸான் எக்ஸ்-ட்ரெயில் காரின் 4வது தலைமுறை மாடல் ஆகும். ஆனால் உலகம் முழுக்க பிரபலமானதாக இருந்தாலும் கூட, இந்திய சந்தையில் நிஸான் எக்ஸ் ட்ரெயில் தடுமாறுகிறது.

இதற்கு தற்போது வெளியாகியுள்ள நிஸான் எக்ஸ் ட்ரெயில் காரின் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ஒரு உதாரணம். காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒரு நிஸான் எக்ஸ் ட்ரெயில் கார் கூட விற்பனை செய்யப்படவில்லை.

Nissan X Trail

இதற்கு நிஸான் எக்ஸ் ட்ரெயில் காரின் அதிகப்படியான விலை மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் நிஸான் எக்ஸ் ட்ரெயில் கார் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதன் விலை 48.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

நிஸான் எக்ஸ் ட்ரெயில் கார் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே நிஸான் எக்ஸ் ட்ரெயில் காரின் விலை அதிகமாக உள்ளது. இந்த அதிகப்படியான விலை, நிஸான் எக்ஸ் ட்ரெயில் மீது வாடிக்கையாளர்களுக்கு ஆர்வம் ஏற்படுவதை தடுத்து விடுகிறது.

நிஸான் எக்ஸ் ட்ரெயில் கார் விலை உயர்ந்தது என்பதால், அதற்கு ஏற்ப ஏராளமான வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. இதில், பனரோமிக் எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்றவை எல்லாம் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

செயல்திறனை பொறுத்தவரையில், 12V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 163 பிஎஸ் பவரை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜின் உடன், சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் எக்ஸ் ட்ரெயில் உடன் ஒப்பிடும்போது, டொயோட்டா ஃபார்ச்சூனர் மிகச்சிறந்த ஆப்ஷனாக கருதப்படுகிறது. இதுவும், நிஸான் எக்ஸ் ட்ரெயில் காரின் அதிகப்படியான விலையும், இந்திய சந்தையில் நிஸான் எக்ஸ் ட்ரெயில் காரின் விற்பனையை தடுமாற செய்து விட்டன.

More from DriveSpark

Article Published On: Monday, October 13, 2025, 23:00 [IST]
English summary
Nissan x trail sales report september 2025 zero buyers
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+