நாடே எதிர்பார்த்த காரின் பெயர் அறிமுகமானது! வாயிலேயே சரியா நுழையாத பெயரை வச்சிருக்காங்க!

நிஸான் நிறுவனம் தனது புதிய காம்பேக்ட் காரின் பெயரை தற்போது அறிவித்துள்ளது. இந்த கார் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரபல காரான கிரெட்டா காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த கார் நிச்சயம் மார்கெட்டில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நிஸான் நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் தனது காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. இந்த காரின் பெயரை அந்நிறுவனம் டெக்டான் என வைத்துள்ளது. இந்த கார் வரும் 2026ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ஒரு கார் ஒரு உலகம் " என்ற பெயரில் இ்நத கார் தயாரிக்கப்படுகிறது.

Nissan Tekton

இந்த காரை அந்நிறுவனம் ரொனல்ட் நிறுவனத்துடன் இருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள ஆலையில் வைத்து தயாரிக்கிறது. இந்த டேக்டான் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து எடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துளு்ளது. இந்த வார்த்தைக்கு ஆங்கிலாந்தில் "கிராஃப்ட்மேன்" அல்லது "ஆர்க்கிடெக்ட்" என அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் பிரிமியம் சி செக்மெண்ட் காராக உருவாக்குகிறது.

இந்த காரை அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த செக்மெண்டில் ஏற்கனவே கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக், ஹோண்டா எலவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், டாடா நெக்ஸான் ஆகிய கார்கள் விற்பனவையாகி வருகிறது.

Nissan Tekton

நிஸான் நிறுவனம் இந்த டேக்டான் காரை தனது பிரபல காரான பேட்ரோல் என்ற எஸ்யூவி காரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ளுது. இந்த காரில் ஹைலேட்டே போல்டான மஸ்குலரான வடிவமைப்பை கொண்டுள்ளது தான். இதில் பானட் பகுதி் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளுது. இதில் C வடிவ ஹெட்லைட்டுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ் வைக்கப்பட்டுள்ள பம்பர்கள் தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளுது.

பக்கவாட்டுவடிவமைப்பை பொருத்தவரை மஸ்குலரான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளுது. முன்பக்க கதவுகளில் டபுள் சி ஆக்ஸென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இமயமலை தொடர் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு பக்கவாட்டு டிசைன் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் இலுமினேட் செய்யக்கூடிய லைட் பார்கள் வழங்கப்பட்டுள்ளன. டெயில் கேட்பகுதியில் டேக்டான் என்ற பெயர் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளுது.

இந்த காரின் தொழிற்நுட்ப தகவல்களை அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. இதன் இன்ஜின் திறன் குறித்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி சர்வதேச மார்கெட்டில் விற்பனையாகும் இன்ஜி ஆப்ஷனவ் தான் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த காரின் பெயர் மட்டும் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2026ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்த டேக்டான் கார் நிஸான் நிறுவனம் சர்வதேச அளவில் அனைத்து மார்கெட்டிலும் விற்பனைக்கு கொண்டு வரும் கார் மாடலில் இரண்டாவது காராக இருக்கும். சென்னையில் ரெனால்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில் தான் இந்த காரும் தயாராகிறது. இந்த ஆலையில் தயாராகும் கார் இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வருவதுமட்டுமல்லாமல் சர்வதேச விற்பனைக்காக ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளது.

எந்தெந்த நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதி செய்யப்படும் என்ற விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் இந்தியாவில் இந்நிறுவனம் டீலர்ஷிப் எண்ணிக்கைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாடல்க விற்பனை அதிகரிக்கும். இதனால் டீலர்ஷிப்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் காம்பேக்ட் செக்மெண்டில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வாகனத்தின் அறிமுகம் நிஸான்நிறுவனத்திற்கு நல்ல வளர்ச்சியை தரும் என எதிர்பார்க்கலாம். இந்த வாகனம் நிச்சயம் நல்ல மாற்றத்தை இந்தியாவில் உருவாக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 7, 2025, 18:20 [IST]
English summary
Nissans upcoming suv named tekton full details
மேலும்... #nissan #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+