எல்லாரும் முன் மானத்தை வாங்கிய மாருதி கார்! மஹிந்திரா இல்லாம போட்டியில சுவாரஸ்யமே இல்லையே!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தார் (Thar) வாகனத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிடைத்த தைரியத்தில்தான், கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் 'தார் ராக்ஸ்' (Thar ROXX) என்கிற 5-கதவுகளை கொண்ட புதிய தார் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.

மஹிந்திரா தாருக்கு போட்டியாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) ஜப்பான் நாட்டில் விற்பனையில் இருந்த ஜிம்னி (Jimny) வாகனத்தை அறிமுகம் செய்த போதிலும் தாரின் விற்பனையை முந்த முடியவில்லை. மாருதி சுஸுகி ஜிம்னி மட்டுமின்றி, மஹிந்திரா தார் வாகனத்திற்கு விற்பனையில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் (Force Motors) நிறுவனத்தின் குர்கா (Gurkha) வாகனமும் போட்டியாக உள்ளது.

off-road rivalry

இதுவரையில், மஹிந்திரா தார் வாகனத்துடன் தான் மற்ற இரு கார்களை ஒப்பீடு செய்து பார்த்துள்ளோம். ஆனால், ஜிம்னியையும், குர்காவையும் ஒப்பீடு செய்து பார்த்தது மிகவும் குறைவே. இந்த இரு வாகனங்களும் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் உகந்தவை ஆகும். ஆனால், இவற்றில் ஒன்றை தேர்வு செய்வது கடினமான விஷயமாகும். நிஜ உலகில் இவை இரண்டும் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை காட்டும் விதமாக, இங்கு சில ஜிம்னி மற்றும் குர்கா வாகனங்கள் மணல் நிறைந்த ஆஃப்-ரோடில் தங்களது திறன்களை காட்டியுள்ளன.

மாருதி சுஸுகி ஜிம்னி ஆனது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் எடை குறைவான ஆஃப்-ரோடு வாகனம் ஆகும். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜிம்னி இந்தியாவில் 2023ஆம் ஆண்டு துவக்கத்தில் 5-கதவுகளை கொண்ட வாகனமாக களமிறக்கப்பட்டது. மறுப்பக்கம், ஃபோர்ஸ் குர்கா ஆனது ஓர் பக்கா இந்தியன்-ஸ்டைல் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம் ஆகும்.

off-road rivalry

இந்த இரு ஆஃப்-ரோடு வாகனங்களை டிரைவர்கள் சிலர் ஓர் செங்குத்தான மணல் பரப்பின் மீது ஏற்ற முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், ஜிம்னி மற்றும் குர்கா வாகனங்களில் சிலர் செங்குத்தான குன்று ஒன்றின் மீது ஏற முயற்சிப்பதையும், ஆரம்பத்தில் பல முயற்சிகள் கைக்கூடாமல் போவதையும் காணலாம்.

எவ்வளவு வேகமாக இந்த வாகனங்களை மேலே ஏற்றினார்களோ அதே வேகத்தில் சறுக்கிக் கொண்டு கீழே வருவதை வீடியோவில் காண முடிகிறது. மணற்பரப்பில் வாகனத்தின் டயர்களுக்கு பிடிமானம் கிடைக்காததால், அவை வழுக்கிவிடப் படுகின்றன. வாகனத்திற்கான டிராக்‌ஷன் (Traction) கிடைக்காததால், சில சக்கரங்கள் ஒரே இடத்தில் சுழல்கின்றன. ஆனால், சில முயற்சிகளுக்கு பின் ஃபோர்ஸ் குர்கா வாகனம் ஒன்று வெற்றிக்கரமாக அந்த மலை குன்றின் மீது ஏறியுள்ளது.

மார்க்கெட்டில் ஃபோர்ஸ் குர்கா வாகனங்கள் 3-கதவு மற்றும் 5-கதவு ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு மலை மேட்டின் மீது ஏறியுள்ள ஃபோர்ஸ் குர்கா வாகனம் 3 கதவுகளை மட்டுமே கொண்டது ஆகும். 3 கதவுகள் உடன் அளவில் சற்று சிறியதாக இருப்பினும் இந்த குர்கா வாகனம் எளியதாக ஒன்றும் ஏறி விடவில்லை.

இந்த குறிப்பிட்ட குர்கா வாகனத்தின் டிரைவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றாலும், அதேநேரம் ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் திறனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் இருக்க முடியாது. ஏனெனில், மாருதி சுஸுகி ஜிம்னி வாகனங்களையும் பல டிரைவர்கள் பயன்படுத்தினர். ஆனால், நீண்ட நேரமாக யாராலும் மணல் குன்றின் மீது ஏற முடியவில்லை.

கடைசியில் ஒருவழியாக ஒரு ஜிம்னி டிரைவர் மணலின் மீது முழுவதுமாக ஏறினார். இதற்காக அவர் பெரிதும் சிரமப்படுவதை வீடியோவில் காண முடிகிறது. இதனை தொடர்ந்து, 5 கதவுகளை கொண்ட ஃபோர்ஸ் குர்கா வாகனத்தை ஓட்டிய டிரைவர் ஒருவரும் வெற்றிக்கரமாக மணல் குன்றின் மீது ஏறி நின்றார். மஹிந்திரா தார் வாகனத்தை இந்த போட்டிக்கு கொண்டுவந்திருந்தால், அது இந்த சவாலை இன்னும் எளிதாக கையாண்டிருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மணற்பரப்பின் மீது வாகனம் ஓட்டுவது எவரொருவருக்கும் கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். இருப்பினும், இந்த போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து டிரைவர்களும் சரி, அவர்களது ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களும் சரி சிறப்பாகவே செயல்பட்டுள்ளன. அதேநேரம், இவ்வாறான டிரைவிங்குகள் ஆபத்தானவை என்பது மறைந்துவிட வேண்டாம். ஆதலால், இவ்வாறான பயணங்களை டிரைவ்ஸ்பார்க் ஊக்கப்படுத்தாது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 19, 2025, 10:41 [IST]
English summary
Off road rivalry between maruti suzuki jimny and force gurkha suv vehicles
மேலும்... #off road #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+